|
|
அஃதாவது, ஐம்பத்தாறாநாள் தலைவன் மீண்டு தலைவி யில்லின் வாராநின்றுழி, தலைவி தமர் எதிர்கொண்டுபோய் அழைத்து வந்தபின் உலக இயற்கையின்படி பலவிதமாக அருங்கலம் முதலிய வேண்டுவன கொடுத்து அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு மணச் சடங்குடனே வதுவை முடித்துக்கோடல்.
|
சென்றோன் மீண்டுவந்து அந்தணரையுஞ் சான்றோரையும் முன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்:
|
தன்னூர் வரைதலும் தன்மனைவரைதலும் என்னும் இவ்விரண்டொழித்து,
|
| 1`................ எவற்றினுங் கிழவோ னந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலந் தந்து வரைதல் தகதி யென்ப`
|
என்னுஞ் சூத்திரவிதியால்,சென்றோன் மீண்டுவந்து அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்.
|
| சேலார் புனல்வையை சூழ்தஞழூசை வாணன்தென் மாறையினம் வேலா னெனப்பிறர் வேட்டவர் யார்மணம் வெண்டுகிலின் பாலா ரமளியும் பாற்கட லானது பங்கயக்கண் மாலா யினனிவ னுந்திரு வாயினள் மாதுமின்றே.
|
(இ-ள்.) கயலார்ந்த புனல் பெருகி வரப்பட்ட வையை சூழ்ந்த தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில் வெண்டுகிலின் பான்மையார்ந்த பாயலும் பாற்கடல்போன்றது, இவ் வேந்தனும் செந்தாமரைக்கண் மாலை யொப்பான் ஆயினான்! இம் மாதரும் திருவையொப்பாராயினர்; ஆதலான், நம் வேலானென மணம்வேட்டவர் பிறர் யார் என்றவாறு.
|
சேல் - கயல். ஆர்தல் - பொருந்தல். புனல் - நீர். அமளி - பாயல். இங்ஙனம் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும ஒருகால் மணமுடிப்பதன்றிப் பலகால் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவதன்றே, இவ்வாறு கூறியது என்னையெனின், உடன்போய்த் தன் ஊரின்கண்ணே வரைதலும், மிண்டுவந்து தன் மனையின்கண்ணே வரைதலும், அந்தணர் சான்றோரை முன்னிட்டுத் தாய் தமரறிய மணச்சடங்கின்முறையே முடியாமையான் |
|
1. அகப்பொருள் விளக்கம். வரைவியல் - 29. |