| | அஃதாவது, கற்பிக்கப்படுதலாற் கற்பாயிற்று. கற்பித்தலாவது என்னையெனின், அறிவும் ஆசாரமும் தலைவனாற் கற்பிக்கப்படுதலும், இருமுதுகுரவாராற் கற்பிக்கப்படுதலும், செவிலியாற் கற்பிக்கப்படுதலும், அந்தணர் முதலிய சான்றோராற் கற்பிக்கப்படுதலும் எனக் கற்பித்தல் பலவாயின; ஆதலால், கற்பியல் எனப் பெயராயிற்று.
| ஆயின், இவ்வாறு களவினொழுகல் கற்பின்கணொழுகல் உலகின்கண் இன்றெனின், நன்றுசொன்னாய், அறிவுடையோர் மக்கட்கு மணஞ்செய்யுங்கால் இத்தன்மையாவாளை நினக்கு மணஞ்செய்ய நினைத்தேம், இது நினக்கு இயையோ, இயைபின்மையோ என வினாவி, அவரவர் கூற்றின்படி செய்வர். அவர் கூறாக்கால் குறிப்பான் உணர்ந்து செய்வர் எனக் கொள்க. தலைவியைத் தாயாரும ்இவ்வாறு வினவிக் குறிப்பான் உணர்ந்து செய்வர் எனக் கொள்க. இங்ஙனம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ்செய்தலியல்பாயிற்று; ஆகவே உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சிந நிகழ்ந்தபோதே மய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்ததாயிற்று. இதனை, | | 1`உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல்` | என்னும் குறட்குப் பரிமேலழகருரையில், `நினைத்தலுங் செய்தலோ டொக்கும்` எனக் கூறியதனானுணர்க. எனவே, உலகின் கண் நிகழுங் கற்பொழுக்க மெல்லாம் கந்தருவ மணத்தின் வழிக் கற்பென்றே கொள்க. |
| 1. குறள். கள்ளாமை - 2. | | |
| |