|
| 1`மாறுகொ ளெச்சமும் வினாவும் ஐயமும் கூறிய வல்லெழுத்தியற்கை யாகும்`
|
என்னுஞ் சூத்திரத்தில் ஐய ஓகாரமும் கொண்டார். அதற்கு உதாரணம், `பத்தோ பதினொன்றோ` என உரையாசிரியர் காட்டிப் போந்ததனானுங் கொள்க. பாரணங்கோ என்பதற்குத் தெய்வப்பெண்ணோ என்று கூறினமையால் இறையனார் அகப்பொருளில்,
|
| 2`உரையுறை தீந்தமிழ் வேந்த னுசிதன் தென் னாட்டொளிசேர் விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிலின்தோண் வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த திரையுறை தெய்வங்கொ லையந் தருமித் திருநுதலே`
|
என ஐயத்திற்குக் காட்டிய பாட்டில் பொழிலின் மேலுறை தெய்வம் எனச் சூரரமகளைக் கூறியவாறு கண்டு கொள்க. `பங்கேருகத்தினோரணங்கோ` என்பது மகரவீற்றுப்பதம் அத்துச்சாரியை பெற்று, இன் என்னும் ஐந்தாமுருபு ஏழாவதின் பொருள்பட வந்தது.
|
| 3`யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்`
|
என்னுஞ் சூத்திரவிதியாற் கண்டுகொள்க. அன்றியும், ஊரினிருந்தார், மனையினிருந்தார் என்பதுபோற் பொள்ளினும் அமையும்.
|
பொழிலைச் சார்ந்து நிற்றலின், `பாரணங்கோ` என்றும், பசும்பொற்றகடுவேய்ந்து மரகதவிளிம்படுத்த மாணிக்கச் சுனையருகு சண்பகம், பாதிரி வகுளம், அசோக, சந்தன முதலாய தருக்கள் மலர்ந்த பூநாறு கொழுநிழற்கீழ் ஒரு கற்பகத்தைச் சார்ந்து பளிக்குப் பாறைமேல் கோலக்கலாபம் விரித்து மயிலாட நோக்கி நின்றாளாகலின், இவள் நிற்குமிடத்துச் சிறப்பு நோக்கிப், `பங்கேருகத்தினோரணங்கோ` என்றும், மலையிடத்து நிற்றலால், `வரையரமகளோ` என்றும், சுனைநீ ரருகுநிற்றலின், நீரரமகளே` என்றுங் கூறினாரென்க.
|
பொழிலின்மேலிருந்து பூசைகொள்ளுந் தெய்வம் யாதோ `எனின் சூரரமகள் என்ப. `பாற்கடல்` என்ன அமையாதோ, `திரு` என்றது எற்றுக்கொவெனின்; கடல்களில் குணமிக்க
|
|
1. தொல். எழுத். உயிர் மயங்கியல் - 88. 2. களவியல். 2ஆம் சூ. மேற்கோள். 3. தொல். சொல். வேற்றுமை மயங்கியல் - சூ. 23.
|