|
|
அஃதாவது, தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். தலைமகளை எய்தியிந்தே இவன் ஓதுவான் பிரிவானேன் எனின், முன் ஞானமில்லாதானாகவே ஞானத்தின் வழியது ஒழுக்கமாக லானும், ஒழுக்கத்தின் வழித்துக் கலமாகலானும், இவையெல்லாம் குறையீடாமே யெனின், ஆகாது; கற்பான் பிரியுமென்பது அன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக் கற்றான்; அறம் பொருள் இன்ப வீடுபேறுகள் நுதலிய நூல்களெல்லாம்; இனிப்பரதேயத்து அவைவல்லோர் உளரெனிற் காண்பல் என்று அவை வல்லார்கள் உள வழிச்சென்று தன் ஞானம மேற்படுத்து அவர் ஞானங் கீழ்ப்படத்தற்க எனக் கொள்க. |
கல்விக்குப் பிரிவு தலைமகனா லுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்: |
| மல்வித்த கங்கொண்ட தோளுடை யான்தஞ்சை வாணன் தொல்சீர் நல்வித் தகன்புவி நாவில்வைத் தோன்வையை நாடனையாய் கல்வித் தடங்கடல் நிந்திய காதலர் கற்றவர்முன் சொல்வித்த வென்றழ லார்சுரம் போகத் துணிந்தனரே. |
(இ-ள்.) மற்றொழிலில் வல்லபங்கொண்ட தோளுடையானாகிய தஞ்சைவாணனது பழை புகழாகிய நல்ல விதையினை அகன்ற புவியினுள்ளோர் நாவில் பயிராக வைத்தவனது வைகைநாடு போன்றவளே! கல்வியாகிய பெரிய கடலை நீந்திக் கரைகண்ட தலைவர் திசைகளிற் கற்றவர் முன் தாங்கற்ற கல்வி யானுண்டாகிய கீர்த்தியாகிய வித்தை விதைக்க என்றெண்ணி அழலார்ந்த சுரத்தின்கட்போகத் துணிந்தனர் என்றவாறு. |
மல் - மற்றொழில். வித்தகம் - வல்லபம். வித்து - விதை. புவி : ஆகுபெயர். தடங்கடல் - பெரிய கடல். சொல் - கீர்த்தி. வித்த - வித்தை விதைக்க. |
(408) |
தலைமகள் கார்ப்பருவங்கண்டு புலம்பல்: |
| யாணர்க் குழன்மொழி யென்செய்கு வேன்கல்வி யெல்லையெல்லாம் காணப் பிரிந்தவர் காண்கில ராற்கடன் மேய்ந்துதஞ்சை வாணற் கெதிர்ந்தவர் மங்கையர் போலுமென் வல்லுயிரின் ஊணற்ப மென்னவெண் ணாவரு மேக முருமுடனே. |
(இ-ள்.) அழகினையுடைய குழலிசை போன்ற மொழியாய்! தஞ்சைவாணனுக்கு எதிராகிய பகைவர் மனைவியர் போலுந் துன்ப முழந்திருக்கின்ற என்னுடைய வலிய உயிரை இனிய ஊணாக நகர்தல |