|
|
அஃதாவது, இருவர் அரசர் தம்மிற் பொராநின்ற விடத்து, அவரைச் சந்து செய்தித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சந்து செய்வித்தற்குப் பிரியுமெனின், தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வார், அவர்பொருவிறப்பு என்னையோவெனின், தூதுவர் போலச் சந்து செய்வித்தற்குப் பிரியுமென்பது அன்று; இருவ ரரசரும் நாளைப் பொருதும் என்று முரண்கொண்டிருந்த நிலைமைக்கண், தான் அருளரசனாதலின், இம்மக்களும் இவ் விலங்குகளும் எல்லாம்பட இவை இருகுலத்திற்கும் ஏதம் நிகழ்ந்தது என் செய்யுமோ, யான் இப்போரொழிப்பான்` என்று இருவரையும் இரந்து சந்துசெய்வித்தலும் ஒன்ற தேவரும் அசுரரும் பொருதகாலத்து, தேவரையும் அசுரரையும் மிக்க செய்தாரை யான் ஒறுப்பில் என்று பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்தது போல, இவரையும் மிக்க செய்தாரை ஒறுப்பல் என்று சந்து செய்வித்தலும் ஒன்று எனக் கொள்க. |
தலைமகனானுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்: |
| தூதாக அன்பர் செலத்துணிந் தாரென்றுஞ் சொற்புலவோர் மாதாக வன்பசி தீர்த்தருள் வாணன்தென் மாறையிந்து மீதா அம்பு கிடந்தன போலுண்கண் மெல்லியலிப் போதாகவம்புகல் வோரிக லார்தம் புரம்புகவே.
|
(இ-ள்.) எஞ்ஞான்றுஞ் சொல்லிலேவல்ல நாவலர்களது பெரிய தாகத்தையும் வலிய பசியையும் தீர்த்தருளப்பட்ட வாணன் தென்மாறை நாட்டில் சந்திரன்மேல் அம்பு கிடந்தன போன்ற முகத்தின்மேல் மையுண்ட கண்னையுடைய மெல்லியலே! இப்போது பூசலைச் சொல்வோராகிய மாறுபாடுைடைய இருபெருவேந்தரும் பாசறை நீங்கித் தம் புரங்களிற் சென்ற புக அன்பர் தூதாகப் போகத் துணிந்தனர் என்றவாறு.
|
இந்து - சந்திரன். மெல்லியல் : அண்மைவிளி. ஆகவம் - போர். இகலார் - மாறுபாடுடைய இருபெருவேந்தர். |
(414) |
தலைவி முன்பனிப் பருவங்கண்டு வருந்தல்: |
| மலிகின்ற வண்புகழ் வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல் மெலிகின்ற சிந்தையு மேனியுங் கொண்டு விளர்ப்பெனும்பேர் பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந் தேனைப் புரந்தருளார் நலிகின்ற முன்பனி நாளில்நண் ணார்முனை நண்ணினரே.
|
(இ-ள்.) நிறைகின்ற வளவிய புகழையுடைய வாணன் தென்மாறை நாட்டை வாழ்த்தாதவர்போல மெலிகின்ற நெஞ்சையும் மேனியையும் |