|
|
அஃதாவது, நண்பாகிய வேந்தனுக்குப் பகைவேந்தர் இடையூறுற்றவழி, அவ்விடையூறு தீர்த்தற்குத் தலைமகன் துணையாகப் பிரிதல். தன் உழையரில் ஒருவனைப் படைகூட்டிச் செல்லவிடாது தான் போதல்வேண்டும் என்பத என்னையெனின், நட்புமிக்கால் தானே யவனாயிருத்தலின் அவன் கருமம் தன் கருமமாயெண்ணி விரைவினெழுந்து அப்பகை நீக்கத் தானே போயினன் எனக் கொள்க.
|
துணைவயிற் பிரிந்தமை தோழி தலைமகட்குணர்த்தல் : |
| நண்பான மன்னர்க் கிடர்தணிப் பானெண்ணி நல்லுதவிப் பண்பான மன்னர் படர்தலுற் றார்பனி நீர்பொழியும் தண்பா னலந்தொடை அம்புய வாணன் தமிழ்த்தஞ்சை வாழ் வெண்பால் நலங்கொள் செவ்வாயன்னமேயன்ன மென்னடையே.
|
(இ-ள்.) பனிபெய்யும் நீரைப் பொழிகின்ற தண்ணிய கருங்குவளை மாலை யணியப்பட்ட அழகிய புயத்தையுடைய வாணன் தமிழ்த் தஞ்சையில் வாழ்கின்ற வெண்மை நிறம் பொருந்திய பாலின் இனிமையைக் கொள்ளுஞ் செய்ய வாயையும் அன்னம் போன்ற மெத்தென்ற நடையையும் உடையாய்! நம் மன்னர் தமக்கு நட்பான மன்னர்க்குப் பகை வந்ததால் பகைவந்த துன்பத்தைத் தணிக்கும் பொருட்டாக் கருதி நல்லுதவிக் குணத்தினாலே செல்லலுற்றார் என்றவாறு.
|
இடர் - துன்பம். தணித்தல் - தீர்த்தல். எண்ணல் - கருதல். பண்பு - குணம். படர்தல் - செல்லுதல். பானல் - கருங்குவளை. அம் : சாரியை, தொடை - மாலை. அம் - அழகு. நலம் : ஆகுபெயர். `செவ்வாய்நடை` என்புழி உம்மைத்தொகை. மென்னடை ஆகுபெயர். பின்பனிக் காலமாதலால், `பனிநீர் பொழியுந் தண்பானல்` என்று கூறியவாறுணர்க. |
(417) |
தலைமகள் பின்பனிப் பருவங்கண்டு புலம்பல் : |
| இன்னற் படுகின்ற என்னையெண் ணார்தமக் கின்றுணையாம் மன்னற் குதவிப் பிரிந்தநங காதலர் வாணன் தஞ்சைக் கன்னற் கடிகை யறிவதற் லாற்பகல் காண்பரிதாம் பின்னற் கனையிருள் கூர்துன்ப மேவிய பின்பனியே.
|
(இ-ள்.) தமக்கு இனிய துணையாகிய மன்னர்க்கு உதவியாகப் பிரிந்த நம்முடைய காதலர், வாணனது தஞ்சை நகரில் நாழிகை யறிவிக்கும் வட்டிலான நாழிகை யறிவதல்லது ஞாயிற்றைக் காண்பதரிதாம். பின்னலாகிச் |