பக்கம் எண் :

கட
33

கைக்கிளை

 

1`தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு
பொருந்திய நான்கேஐந்தென மொழிப`

- (ஐந்தாம் அவத்தை)    

     இங்ஙனம்   நான்கு   அவத்தைக் கண்ணும் கூறிய மெய்ப்பாடு  பதினாறும்
நிகழ்ந்ததில்லை; ஐந்தாம்     அவத்தைக்    குணம்   நான்கினும்   முதற்குணம் `தெரிந்துடன்படுதல்` என்பதற்கு,  ஆராய்ந்துடன்  படுதல்  என்று    இலக்கணங்
கூறினமையால்,  இவற்றின்  ஒன்றுமின்றிக்  கைக்கிளையில் உடன்பட்டாள் என்று
சொல்லுவது  பொருந்தாதென்பது.  ஆயின்,  சான்றோர்  செய்யுள்  பலவற்றினுங்
கைக்கிளையுட்  குறிப்பறிந்தானென்று கூறியவாறென்னையெனின், அவள்  பார்த்த
பார்வை நன்றெனக் கோடற்கும் அன்றெனக்  கோடற்கும்  பொருவேயாம். அஃது
என்னையெனின்,     ஒருவன்    பசித்து,   வந்தானொருவனைக்    கண்டான்;
அப்  பசியோ  டிளைத்து  வந்தவன்    முகத்தைப்    பார்த்தான்; அப்பார்வை
பசி தீர்க்குமென்பதோ தீராதென்பதோ என்னல்போல  நின்றது. பசித்து வந்தவன்,
இவன் சோறு கொடுப்பானென்று எண்ணுவதல்லது,  கொடானென்ன  எண்ணுவது
இல்லை; யாதினாலெனின், தன் அவாவினால் என்பது.  அதுபோலத் தலைமகனும்
தன் அவா வயத்தனாய்க் கூறியதல்லது, அறிவிலனாய்க் கூறினான்  அல்லனென்று
உணர்க.
 
     இனி,  வேட்கையின்  குறிப்பு உணர்ந்தது பதினாறாங் கவி முறுவற் குறிப்பு
உணர்தற்     செய்யுளில்     கூறியவாற்றான்     உணர்க.  இனி,   இவ்வாறே
அகத்திணையியலில்,

2`முன்னைய நான்கு முன்னதற் கென்ப`
என்னுஞ்  சூத்திரத்தில்  நச்சினார்க்கினியர்  உரையின், `அவ்வேட்கை மிகுதியாற்
கூறியதல்லது  உடம்பட்டாளல்லள்`,  என்று  கூறியவாறுணர்க. அவளுடம்படுவது
எங்ஙனமெனின், மறுத்தெதிர்  கோடலின்கண்ணே   உடம்பட்டவாறு    உணர்க.
ஆயின் அந்நான்கு அவத்தைக்கண் ஓதிய  பதினாறு  வகையும்  3நிகழ்ந்தன்றோ உடம்படுவது   எனின்   நிகழ்ந்தது  உண்டென்று   உணர்க.   எங்ஙனமெனின்
மெய்தொட்டுப் பயிறல் முதலிய நிகழ்ந்துழி   எல்லா   வகையும்   நிகழ்ந்தவாறு
கூறவேண்டா வாயிற்று. (4)

கைக்கிளை முற்றிற்று.


     தொல். பொருள். மெய் - 17.
     தொல். பொருள். அகத் - 52. (பாடம்) 3. நிகழாதன்றோ.