பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
51

 
     பிரியினும், கணப்போதும் தரியேன் என்று அணங்கின் முன்னே  சூளுற்றான்
என்றவாறு.

வண்மைக்கொடி,   வண்கொடியென   நின்றது; நன்மை   நெறி   நன்னெறியென
நின்றாற்போல.   வண்மை,   நன்மையென்பன   பண்புப்பத  மாகலின்,  ஈற்றுயிர்
மெய்கெடுதல் அப்பதத்திற் கியல்பெனக் கொள்க. வண்மை - கொடை,  எய்தல் -
பொருந்துதல். `வாணனொன்னார்` என்பது,

 1"அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின்
அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே"

என்னும்  வேற்றுமை  மயங்கியற்  சூத்திரத்தால்,  அது   என்னும்   ஆறனுருபு,
`வாணனுக்கு ஒன்னார்` என நான்கனுருபாகப் பொருள் கொள்க.

எண் - எண்ணம். இவ்வண்ணம் என்புழி, சுட்டு, முற்கவியில்,  `விளர்ப்பதென்னே`
என்று   கூறினமையான்,   அவ்விளர்ப்பு  வண்ணத்தைச்  சுட்டிற்று.  `இரங்கேல்
இரங்கேல்` என்றது அடுக்குமொழி. என்னையெனின்,

 2`கொல்லல் கொல்லல் செய்நலங் கொல்லல் எஞ்ஞான்றும்
சொல்லல் சொல்லல் பொய்ம்மொழி சொல்லல் எஞ்ஞான்றும்
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் எஞ்ஞான்றும்`

(என்னும் இம்மூவடி வெளிவிருத்தத்துள், அடிதோறும் அச்சப்  பொருண்மைக்கண்
விரைவுபற்றிய  அடுக்குமொழி  வந்தவாறு  போலக்   கொள்க.    ஏர் - அழகு.
இமிர்தல் - முரலுதல். என்னை,

 3"வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதும்"


என்னுங் குறிஞ்சிக் கலியுள்,  இமிர்தல்  வண்டொலிக்கு வந்தவாறு கண்டுகொள்க.

`நுண்கொடி  யேரிடை`: உவமைத்தொகை.  `நுண்கொடி    யேரிடை   வண்டிமிர்
பூங்குழ னூபுரத்தாள்`  என்புழி  உம்மைத்தொகை. `பிரியேன்` என்னுங் கிளவியில்,
`தரியேன்  நிற்பிரியினும்`   என்று   கூறியவாறு   என்னையெனின்,   இங்ஙனங்
கூறாவிடின்,  `பிரிந்து    வருகென்றல்`   என்று  அடுத்த   கிளவி   வருதலின்,
`பிரியேன்` என்று முன்சொல்லி, உடனே, `பிரிந்து


1. தொல். சொல். வேற்றுமை மயங். - 11.
2. யாப்பருங் - விரு. செய். 15-ஆம் சூ. உரை, மேற்கோள்.
3. கலித். குறிஞ்சி - 7.