| | (இ-ள்.) மேற்சென்று பகையை வென்ற திண்ணிய சேனையையுடைய வாணனது வளவிய தஞ்சையைச் சூழ்ந்து வந்து 1நன்றே தரப்பட்ட வையைநாடு போன்றவளே, யான் ஒரு சொல் சொல்லுகின்றேன், அது கேட்பாயாக; நம்மிருவர்க்கும் அரியவுயிர் ஒன்றாயதுபோல என் சொல்லும் ஒன்றே; யாதெனின், உவ்விடத்துயர்ந்த சோலையினுள் ஒளித்து நின்று வருவேன், இவ்விடத்து சிறிதுபோது விளையாடுக என்றவாறு,
| `சென்றே பகைவென்ற` என்றது, வஞ்சித் திணைப்பொருள்: அது மேற்சென்று பகைபொருதல். | | 2`வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கார் எதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகு முழிஞை`
| என்னும் வெண்பாவானும்,
| | 3`வஞ்சி தானே முல்லையது புறனே` 4`எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுகத் தலைச்சென் றடல்குறித் தன்றே`
| என்னுஞ் சூதிரங்களானும், பகைவேந்தனை வேந்தன் மேற்சென்று பொருவது வஞ்சித்திணை. மேற்சேறல் எனினும், தலைச்சேறல் எனினும் ஒக்குமாதலான், `சென்றே பகைவென்ற திண்படை வாணன்` என்றார்.
| நன்று - நன்மை. ஆருயிர் - அரிய வுயிர். ஊங்கு : சுட்டு நீண்டது. `சிறிது` என்றது காலத்தின்மேல் நின்றது. காலத்திற் சிறிது கணமாதலின் கணப்போது விளையாடுக என்றவாறாயிற்று. ஆயின், இங்ஙனம் பிரியின், இவன் அன்பிலனாம், தலைவி யாற்றாளாம்; மற்றென்னை பிரிந்தவாறு எனின், பிரியாவிடின் களவு பிறர்க்குப் புலனாம்; புலனாகவே, இவள் பெரு நாணினளாதலால் இறந்துபடுமாதலின், பிரியவேண்டுமென்று கருதிப் பிரிந்தான் என்பது. தலைமகள் பிரிவுக்கு இயைந்து ஆற்றுமோவெனின்.ஆற்றும் :எங்ஙனமெனின், ஆற்றாமையான் இறந்துபட்டுழி எம்பெருமானும் இறந்துபடும் என்று கருதிப் பிரிவினை ஆற்றல் வேண்டுமென்று ஆற்றினளாம். | (24) | | 1. (பாடம்.) நன்மை. 2. சேந். திவா. 12 ஆம் தொகுதி. 3. தொல். பொருள் புறத் - 6. 4. தொல். பொருள். புறத். 7.
| | | |
| |