|
அஃதாவது, தலைவி, பிரிந்து போகுழிப் போகின்ற தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்.
|
செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்: |
செல்லுங் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் என்பது, தலைவன், புணர்ச்சிக்களத்தினின்றும் பெயர்ந்து போகாநின்ற தலைமகளது செலவைக் கண்டு தன் நெஞ்சத்தோடு சொல்லுதல்.
|
| அகிலேந்து கூந்த லொருகையி லேந்தி யசைந்தொருகை துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறைவாய் நகிலேந்து பூங்கொடி போற்செல்லு மானெஞ்ச நம்முயிரே.
|
(இ-ள்.) நெஞ்சமே நம்முயிராய தொருவடிவு கொண்டு அகிற்புகை யேந்திய கூந்தலை யொருகையி லேந்திக்கொண்டு, அசைந்து, தாளிணையேந்துந் துணைச்சிலம்பு ஆராவாரிக்கத் துளி கலநத் முகிலையேந்திய பூவொடுகூடிய பொழில் சூழ்ந்த தஞ்சைவாணனது கடற்கரையிடத்து, முலைலையேந்து பூங்கொடி நடந்து சொல்லல்போற் செல்லும், நீ காண்பாயாக என்றவாறு.
|
கூந்தல் முடியாமலும் துகில் உடாமலும் வந்ததென்னையெனின், புணர்ச்சிக்களத்து இருப்புழி ஆயக்கூட்டத்தார் வருவாரென்றும், வந்தால் களவு வுலனாமென்றுங் கருதி, அவ்விடத்து நீங்கிக் குழல் முடிக்கவும் துகில் உடுக்கவும் நினைத்து வந்தாளென்க.
|
|
அகில்: ஆகுபெயர். துகில் - புடைவை. துளி - தண்ணீர். நகில் - முலை. நெஞ்சம்: அண்மைவிளை. ஆல் : அசை. `காண்பாய்` என்னுஞ்சொல ் எச்சமாய் நின்று முடிந்தது. |
(27) |
பாகனொடு சொல்லல்: |
பாகனொடு சொல்லல் என்பது தலைவன் தன்னைத் தேடி வந்த பாகனொடு தலைவி செல்வதைக் காட்டிக் கூறல்.
|
| தென்பால் திலகமன் னன்றஞ்சை வாணன்தென் மாறைமுந்நீர் வன்பால் திரண்முத்த வண்டலின் மேல்வரும் ஏதமஞ்சி முன்பார்த்தென் நெஞ்சம் வரும்வழி பார்த்து முறைமுறையே பின்பார்த் தொதுங்குதல் காண்வல வாவொரு பெண்ணணங்கே. |