|
(இ-ள்.) வலவா, ஒரு பெண்ணணங்கு தென்திசைக்குத் திலகம் போன்றவனாகிய தஞ்சைவாணணனது தென்மாறை நாட்டுக் கடற்கரையில் வலிய பாற்றிரள் போன்ற முத்தத்தினான் வண்டலம்பாவை செய்து விளையாடும் ஆயக்கூட்டத்தார் மேலாக வருங் குற்றமஞ்சி முன்னே பார்த்து என் நெஞ்சம் வருகிற வழியை முறைமுறையாய் இருபக்கமும் பார்த்து, யான் வருகின்றேனோ என்று பின்பார்த்து நடந்து ஏகல் காண்பாயாக என்றவாறு.
|
|
`பாற்றிரண் முத்தம்` என்புழி உவமைத்தொகை. வண்டலின் மேல்வரும் ஏதம் - ஆயக்கூட்டத்தார் தான் வருகின்ற கோலங்கண்டு ஐயுறுவார் என்னுங் குற்றம்.
|
வலவன் - தேர்ப்பாகன், `பெண்ணணங்கு` என்றது பின்மொழி நிலையல். `அணங்குபோலும் பெண்` என்று பொருள் கூறுக; இதனை முன்மொழி நிலையல் என்பாரும் உளர். |
(28) |
பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று. |