|
|
அஃதாவது, தலைவி வேறுபாட்டைக் கண்டு புணர்ச்சியுண்மை அறிந்தாராய்ந்து தன் மதியை யுடன்படுத்தல்.
|
| 1`முன்னுற உணர்தல் கறையுற உணர்தல் இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென் றாங்குமூ வகைத்தே பாங்கிமதி யுடன்பாடு`
|
என்னுஞ் சூத்திரவிதியால் பாங்கிமதி யுடன்பாடு மூவகைப்படும். அவற்றுள்,
|
முன்னுறவுணர்தலாவது - தலைவி பாங்கற் வட்டத்தின் கண் பாங்கியை நீங்கிச் சென்று தலைவனைப் புணர்ந்து மீண்டு வந்து பாங்கி முன்னுற்றவழி, பாங்கி தலைவியது வேறுபாடு கண்டு அதனானே கூட்டுமண்மை யறிதல்.
|
குறையுற உணர்தலாவது - பாங்கி தலைவன் தழையுங் கண்ணியுங் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.
|
இருவரு முள்வழி யவன்வர வுணர்தலாவது - தலைவியும் தானும் ஒருங்கிருந்துழி, தலைவன் அவ்வாறு வரக்கண்டு அதனானே கூட்டுமண்மை யறிதல்.
|
முன்னுறவுணர்தல்: |
| 2`நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியும் செய்வினை மறைப்பும் செலவும் பயில்வுமென் றிவ்வகை யேழினு மையமுற் றோர்தலும்.`
|
நாற்றமாவது - தான் பண்டு பயின்றறியாததோர் நாற்றம். தோற்றமாவது - கூட்டத்தாற் பிறந்ததோ ரழகு. ஒழுக்கமாவது - தெய்வந்தொழமை முதலியன. உண்டியாவது - ஊண் பண்டையிற் சுருங்குதல். செய்வினை மறைத்தலாவது - தான் செய்யும் வினையைப் பாங்கிக்கு மறைத்தல். செலவாவது - ஆயத்தை நீங்கித் தனியே சேறல். பயில்வாவது - எப்பொழுதும் ஓரிடத்தே நிற்றல்.
|
இவ்வேழினானும் பாங்கி தலைவியை ஐயமுற்று ஆராய்தல். இவ்வேழினுள் இச் செய்யுள் தோற்றத்தால் ஆராய்கின்றது. |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 22. |
2. அகப்பொருள் விளக்கம், களவியல் - 23. |