பக்கம் எண் :

4

4.  சப்பாணிப் பருவம்

1.     விழைஅற முதல்கல்வி அறியுநுண் அறிவும்அம்
           மேதைக் கிணங்கொழுக்கும்
       மேயஇவை உடையார்த் தழீஇஅவர்சொல் இனிதேற்கும்
           மேம்பாடும் மாறுகருதா
       மழைநிகர் கொடைத்திறனும் நனிவரூஉ தினிஈட்டும்
           மாண்புமாற் றலரைஅஞ்சா
       வன்மையும் இடம்காலம் முதல்அறித லும்கடிய
           மாற்றம்நவி லாதகுணமும்
       உழையரும் விருப்பம்அறி யாதடக் குதலும்நலன்
           ஓங்குகாட் சிக்கெளிமையும்
       உடையன்இவன் உலகுவத் தற்குரியன் என்றுளத்
           துன்னிஇறை யுனையமணிகள்
       தழையும்முடி தொட்டுக் கொடுத்தருள் மலர்க்கைகொடு
           சப்பாணி கொட்டியருளே
       தண்டமிழ்க் குன்றையாம் குன்றுதித் தெழுபானு
           சப்பாணி கொட்டியருளே

    [அ. சொ.]  விழை-எவரும் விரும்பும், மேதை-பேரறிவு, நுண்ணறிவு, இணங்கு-பொருத்தமான, மேய-பொருந்திய, ஒழுக்கு-ஒழுக்கம், உடையார்-உடையவர் களை, தழீஇ-தழுவி மாறு-எதிர்உதவி, கொடைத்திறன்-வள்ளன்மையின் கூறு பாடு, நனி-மிகவும், வரூஉதினி-சேனை, ஈட்டு-தேடும்.  மாண்பும்-பெருமையும், மாற்றலர்-பகைவர், கடிய மாற்றம்-வன்சொல், நவிலாத-கூறாத, உழையரும்-பக்கத்தில் உள்ளவர்களும், உலகு-உலக மக்கள், உவத்தற்கு-விரும்புவதற்கு, உன்னி-எண்ணி, இறை-மன்னர்கள், புனைய-