பக்கம் எண் :

5

5. முத்தப் பருவம்

1.     திருப்பஞ் சாதி மறையுணர்மண்
           தேவ ராதி நால்வர்களுஞ்
       செறிந்த மற்றை மூவர்களுந்
           தீரா இருவல் வினைத்தொடர்பால்
       உருப்பஞ் சாரும் பிறந்தைமரீஇ
           யுறமேற் போயுங் கீழிழிந்ததும்
       உழற லாய பெருந்தாகம்
           ஒருங்கு மாய்த்தின் பொருங்கடைய
       விருப்பஞ் சாரு மெய்யடியார்
           மிக்க தொகையா ரொன்பதின்மர்
       மேய தனியா ரறுபதின்மர்
           மேலு மூவர் சரித்திரமாங்
       கருப்பஞ் சாறு மொழிமதுரக்
           கனிவாய் முத்தந் தருகவே
       கனகக் குன்றை யனகசெழுங்
           கனிவாய் முத்தந் தருகவே.

    (அ. சொ.) பஞ்சாதி-வேதங்களில் ஐந்து, ஐம்பது எண்ணிக்கையில் அமைந்த ஸ்லோகம்.  இதனை வடமொழியாளர் பஞ்சாத் என்பர்.  தனித்தனியே பெரும்பாலும் ஐம்பது மொழிகள் கொண்ட யசுர்வேதம் என்பர்.  இவ்வாறு முறைப்படுத்தி அமைந்தவன் இராவணன் என்றும் கூறப்படுகிறது.  மண்தேவர்-பூசுரர் எனப்படும் பிராமணர், ஆதி-முதலிய, நால்வர்-வேதியர், அரசர், வணிகர், வேளாளர், செறிந்த-சேர்ந்த, கலப்பினால் உண்டான மற்றைமூவர்-அநுலோபர்,   பிரதிலோமர்,   சங்கரர்,   இருவல்வினை-இரண்டு  கொடிய  வினைகளாகிய, நல்வினை தீவினைகள், உருப்பம்-வெப்பம், பிறந்தை-பிறப்பு, மரீஇ-பொருந்தி,