சொக்கு-பேரழகு. புகறி-புகல்வாய். ஆறு அஞ்சிரட்டி-அறுபது. திணைப்பொருள்-அகத்திணைப்
பொருள்: இஃது இறையனாரால் செய்யப்பெற்ற அகப்பொருள் நூல் ஏழேழ் புலவர்-கடைச் சங்கப்புலவர்
நாற்பத்தொன்பதின்மர்.
பொருள் விரித்து முழுதும் பகர்ந்த கனிவாயால்-உருத்திரசன்மராய்த்
தலைமை தாங்கிப் புலவர் கூறும் பொருளுரை கேட்டுச் சிறந்ததிதுவெனக் கூறிய கனிபோன்ற வாயால்.
(46)
வேறு
கடுந டைச்சிந் துரம ருப்பின்
கதிர்கொள் முத்துஞ் சரவைநீள்
கடல ளிக்கும் பணில முத்தும்
கழையின் முத்தும் கரடுவான்
உடுமு கட்டம் புயல்க ருக்கொண்
டுமிழு முத்தம் கருகல்தேன்
ஒழுகு பொற்பங் கயம டல்தந்
தொளிரு முத்தந் திருகல்காண்
படுக ரைக்குண் டகழி நத்தின்
பரிய முத்தந் தெரியவே
பரவை யெற்றுந் திரைகொ ழிக்கும்
படியில் முத்தஞ் சிறுமகார்
கொடுப ரப்பும் பதிபுரக்குங்
குமர முத்தம் தருகவே
குறுமு னிக்குந் தமிழு ரைக்குங்
குழவி முத்தம் தருகவே.
|