பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

56

New Page 1

        “எவ்விட வாயும் விடாது கடித்து, அவன்
            இன்னுயிர் கொள்” கெனவே,
        வெவ்விட வாய்உர கந்தமை மற்றவன்
            மேனியின் மேல்விடவே,                    

(359)

        எட்டுஅர வங்களும் ஏறி விழுந்து, எயிறு
            என்பில் அழுந்தி யுறப்
        பட்டுரு வும்படி கவ்விய போதுஅவை
            பற்குலம் உக்கனவே.                     

(360)

        சாலஇடைந்தன; வேகம் இழந்தன;
            தாகம் எழுந்து அழல் வாய்
        ஆல விடம் சொரி ஆரெயிறு எங்கணும்,
            ஆரமுது ஊறினவே.                       

(361)

        உற்றது கண்டவர் சென்றுரை செய்தலும்,
            உம்பரை இம்பருடன்
        செற்றவன், நெஞ்சு சிவந்தது; இருண்டது
            செங்கதிர் மண்டலமே.                     

(362)

        “விடுக இனிச்சிறு வினை, கடுகத்திசை
            விகட கடக்கரி முன்
        இடுக சிறுக்கனை” எனமுனி வுற்றனன்
            இகல்அவு ணர்க்கிறையே.                       

(363)

    ‘சிறு வினை’: பாம்பைச் சிறுவன் மேல் விட்டது. இரணியன் வதைப் படலம் 91 முதல் பாடல்கள்.

        திருகு சினத்துஅடல் அவுணர் தனித்தனி
            திசையள விட்டனர் போய்,
        “வருக கடக்கரி! அரசன் அழைத்தனன்,
            வருக சடக்” கெனவே,                    

(364)

        விந்தம் எனத்தனி நின்ற பருப்பதம்,
            வெண்கயி லைக்கிரிமா
        மந்தர வெற்புஇவை தம்தரம் ஒப்பன,
            வந்தன திக்கயமே.                           

(365)

        வந்த மதக்கரி முன்புற மற்றவர்
            மைந்தனை வைத்தலும், அச்
        சிந்து மதக்கரி நின்று தனித்தனி
            சென்றுஎதிர் குத்தினவே.                     

(366)