இதுவும் அது 392. | என்னுடைய தோள்வலியு மென்னுடைய | | வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல் நின்னுடைய பேதைமையி னாலுரைசெய் தாய்இதுநி னைப்பளவில் வெல்ல அரிதோ. |
(பொ-நி.) தோள்வலியும், வாள்வலியும் யாதுமறியாது, பேதைமையினால் உரைசெய்தாய், நினைப்பளவில், வெல்ல அரிதோ? (எ-று.) (வி-ம்.) பேதைமை-அறியாமை. நினைப்பளவில் - நினைத்த அளவில். அரிதோ-அரிதன்று என்றபடி. (81) கலிங்கர்கோன் போர்மேற் செல்லக் கூறியது 393. | வேழமிர தம்புரவி வெம்படைஞர் | | என்றினைய நம்படைவி ரைந்து கடுகச் சோழகுல துங்கன்விட வந்துவிடு தண்டினெதிர் சென்றமர்தொ டங்கு கெனவே. |
(பொ-நி.) துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர், நம்படை, அமர் தொடங்குக என; (எ-று.) (வி-ம்.) வேழம் - யானைப்படை. புரவி - குதிரைப்படை. துங்கன்: குலோத்துங்கன். வந்துவிடு-வந்து இறுத்த. தண்டு-சேனை. அமர் தொடங்குக- போர் தொடங்குவதாக. (82) இதுவும் அது 394. | பண்ணுக வயக்களிறு பண்ணுக | | வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர் நண்ணுக படைச்செருநர் நண்ணுக செருக்கள நமக்கிகல் கிடைத்த தெனவே. |
(பொ-நி.) களிறு பண்ணுக; புரவி பண்ணுக, தேர் பண்ணுக; இகல் கிடைத்ததென, செருக்களம் செருநர் நண்ணுக நண்ணுக என; (எ-று.) |