பக்கம் எண் :

போர் பாடியது165


     
     (பொ-நி.)
பவன  பதத்தில்,  களம் உறு,  துரககணத்தின் முகத்திலே,
முடிவினில், சுடர்விட்டெழு,  வட  அனலத்தினை வைத்தது (ஒத்தது); (எ-று.)

     (வி-ம்.) பவனம்-காற்று.  பதம்-தன்மை.  உகக்கடை-முடிவுயுக.  உண-
உண்ண.  சுடர்விட்டு  எழு-ஒளி  வீசி.  மேலோங்குகின்ற.  வட  அனலம்-
வடவாமுகாக்கினி.    களம்-போர்க்களம்.  துரகம்-குதிரை. கணம்-கூட்டம்.
குதிரைகளின் முகத்திலே வடவைக்கனலை வைத்தாற்போலிருந்த தென்க.
                                                          (12)

யானையொடு பொருவோர் இயல்பு

416.களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர்
      கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
இளமுலை எதிர்பொரும் அப்பொழு திப்பொழு
     தெனவெதிர் கரியின்ம ருப்பின்முன் நிற்பரே.

     (பொ-நி.) சிலர்,  துரக  கணத்தின்  முகத்து;  கறுவிலர்,  இளமுலை
எதிர்பொரும் அப்பொழுது, இப்பொழுதென, கரியின் மருப்பின்முன், நிற்பர்;
(எ-று.)

     (வி-ம்.) களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம், கறு-சினம்.
கலவி-புணர்ச்சி. நித்திலம்-முத்து. கரி-யானை. மருப்பு-தந்தம். சிலர்  குதிரை
முகத்து நிற்றிலை வெறுத்து யானை முகத்து நின்றனர் என்க.        (13)

இதுவும் அது

417.எதிர்பொரு கரியின்ம ருப்பைஉ ரத்தினில்
      இறஎறி படையினி றுத்துமி றைத்தெழு
சதுரர்கள் மணியக லத்தும ருப்பவை
     சயமகள் களபமு லைக்குறி ஒத்ததே.

     (பொ-நி.) கரியின் மருப்பை, உரத்தினில் இற, இறுத்து எழு சதுரர்கள்
அகலத்து மருப்பு அவை, முலைக்குறி ஒத்தது: (எ-று.)

     (வி-ம்.) கரி-யானை.  உரம்-மார்பு.  இற-இற்றுப்போகும்படி. எறிபடை-வாள்.  இறுத்து-ஒடித்து.   மிறைத்து-இறுமாந்து.  சதுரர்கள்-திறமை  மிகுந்த வீரர்கள். அகலம்-மார்பு.