(வி-ம்.) தரை மகள் - மண் மகள். உடலால் தாங்கி -அணைத்து என்றபடி. அரமகள்-தெய்வப்பெண். அவ்வுயிர்-அக் கணவனுடைய உயிர். ஆவி-உயிர். ஒக்க-ஒருசேர. (12) கணவன் தலை பெற்ற மனைவியின் செயல் 484. | பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே | | போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின். | (பொ-நி.) பயிரவியை ,"கை, வாள் எங்கே, மார்பு எங்கே, தோள் எங்கே" என்று கேட்பாளைக் காண்மின் ; (எ-று.) (வி-ம்.) பொருதடக்கை - போர்செய்கின்ற நீண்ட கை. கைவாள்: உம்மைத்தொகை. மணி-அழகிய. பரு - பருத்த. வயிரம் - அழுத்தமானது. பயிரவி-யோகினி. (13) எவ்விடமும் குருதிக்கறை யுண்டது 485. | ஆடற்று ரங்கம்பி டித்துஆளை யாளோட | | டித்துணிப்பு டைத்தவ்வி ரும்புண்ணினீர் ஓடித்தெ றிக்கக்க ருங்கொண்டல் செங்கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்மின்களோ. |
(பொ-நி.) துரங்கம் பிடித்து ,ஆளை ஆளோ டடித்து. புடைத்த புண்ணின் நீர்தெறிக்க, கருங்கொண்டல் செங்கொண்டல் ஒக்கின்ற ஆறு காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) ஆடல்-போர். துரங்கம் - குதிரை (யையேயன்றி) ஆளை ஆளோடு-போர்வீரரைப் போர்வீரருடன் பிடித்து அடித்து என இயைக்க. அடித்துப் புடைத்த -மோதி அடித்த. இருமை - பெருமை. நீர் - செந்நீர். கருங்கொண்டல் - கரியமேகம், செங்கொண்டல் - சிவந்த நிற மேகம். ஆறு-வகை. (14) நிணக்குவியலிடத்திருந்த காகங்களின் இயல்பு 486. | நெருங்குஆக வச்செங்க ளத்தேத | | யங்குந்நி ணப்போர்வை மூடிக்கொளக் கருங்காகம் வெண்காக மாய்நின்ற வாமுன்பு காணாத காண்மின்களோ. |
|