பக்கம் எண் :

24கலிங்கத்துப்பரணி

     (பொ-நி)  "மதுகரம்  இடை இறும்  இறும்" என எழா "புகல் இடம்
இலை" என விழா, எழுவது விழுவதாம் அளக வனிதையர் திறமின்; (எ-று)

    
(வி-ம்.)இடை - இடுப்பு. நிலை - பெறுதல். இறும் ஓடியும். (கூந்தல்
கொங்கைகளின் சுமையால் முடியும் எனல். எழா-கூந்தலை விட்டெழுந்தும்.
புகலிடம்-புகுதற்குரிய இடம்; தகுதியான இடம்; அடைக்கலம். இலை-வேறு
இல்லை. விழா - கூந்தலில் விழுந்து. அடைய - முழுதும். மதுகரம்-வண்டு,
அளகம்  -  கூந்தல்.  வனிதையர்  -  பெண்கள்.  கூந்தலில்  வண்டுகள
்விழுந்தும்   எழுந்தும்   பறத்தல்  கூறப்பட்டது.  வண்டுகள்  மங்கையர்
கூந்தலில்  படிதலும்,  அதை  நீங்கிப்  போதலும்  முதலிய செயல்களைத்
தற்குறிப்பேற்றமாக்கி   வேறு   புகலிடமில்லாது   தங்குவதாகவும்,  நாம்
நிலைத்திருப்பின்   இவள்   இடை   ஒடியுமே  என,  வருந்தி  எழுந்து
செல்வதாகவும் குறித்தநயம் மிக்க சிறப்புடையது.                  (37)

நடை இயல்புகூறி விளித்தது

58.உபய தனமசையில் ஒடியுமிடை நடையை
     ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபய மபயமென அலற நடைபயிலும்
   அரிவை மீர்கடைகள் திறமினோ.
 
     (பொ-நி) சிலம்பு "இடை ஒடியும்;  நடையை ஒழியும் ஒழியும்" என,
"அபயம் அபயம்" என அலற, நடை பயிலும் அரிவைமீர் திறமின்; (எ-று.)

    
(வி-ம்.) உபயம்-இரண்டு. தனம்-கொங்கை.  இடை-இடுப்பு. ஒழியும்-
விட்டொழியும். ஒள்-ஒளி பொருந்திய. .அலற-ஒலி செய்ய. நடை பயிலும்
-நடக்கும். அரிவை - பெண்.  சிலம்பு  இடை  ஒடியுமென அரற்றியதாகக
்கூறினார். மாதர்கள் ஆடவர்களைப் போல் மிகுதியாக நடத்தலின்மையின
்நடை பயிலும் என்றார்.                                      (38)

காவிரியை ஒப்புக்கூறி விளித்தது

59.பூவிரி மதுகரம் நுகரவும்
     பொருகயல் இருகரை புரளவும்
காவிரி எனவரும் மடநலீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.

     (பொ-நி)மதுகரம் நுகரவும், கயல் கரை புரளவும்  காவிரி எனவரு மடநலீர் திறமின்; (எ-று.)