பலியிட்ட தலை இயல்பு கூறியது 112. | நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த | | நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ அணைதலும்அச் சிரம்அச்ச முறுத்து மாலோ. |
(பொ-நி.) ஆண்டலைப்புள், வைத்த சிரத்தை இனமென்றெண்ணி, அணைந்து பார்க்கும்;அச்சிரம் அச்சுறுத்தும்; (எ-று.) (வி-ம்.) பலிபீடம்-பலிக்கடன் செலுத்தும் மேலிடம். குஞ்சி-மயிர்முடி. சிரம் - தலை. ஆண்டலைப்புள் - ஆண்டலை என்னும் பறவை. அருகு -தன்பக்கம். அணைதல் - சேர்தல். (16) உடல் கண்ட பேய்நிலை கூறியது 113. | கடன மைந்ததுக ருந்தலைஅ ரிந்த பொழுதே | | கடவ தொன்றுமிலை என்றுவிளை யாடு முடலே உடல்வி ழுந்திடின்நு கர்ந்திடஉ வந்த சிலபேய் உறுபெ ரும்பசிஉடன்றிடஉ டன்திரியுமே. | (பொ-நி.) உடல் " அரிந்தபொழுதே கடன் அமைந்தது கடவதொன்றுமிலை" என்று விளையாடும், பேய் பசி உடன்றிட உடன் திரியும்; (எ-று.) (வி-ம்.) கடன்-நாம் செய்யவேண்டிய கடன். கடவது- செய்யக்கடவது. உவந்த-விரும்பிய. உறு-மிக்க. உடன்றிட- வருத்த. உடன்- அவ்வுடலுடன். திரியும்-செல்லா நிற்கும். உடல் துள்ளிக்கொண்டிருத்தலின், அருகே செல்ல அஞ்சி நின்றன பேய்கள் என்க. (17) எருமைக்கடாப் பலி கூறியது 114. | பகடி டந்துகொள்ப சுங்குருதி இன்று தலைவி | | பலிகொள் என்றகுரல் எண்டிசைபி ளந்துமிசைவான் முகடி டந்துரும் எறிந்தெனமு ழங்க உடனே் மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. | (பொ-நி.) " தலைவீ, இன்றுகுருதிகொள், பலிகொள்"் என்றகுரல், பிளந்து, இடந்து, முழங்க,உடனே, தமருகங்கள் ஒலிமிகும்; (எ-று.) |