பக்கம் எண் :

கோயில் பாடியது47


     (வி-ம்.)  பகடு-எருமைக்கடா.  இடத்தல்-பிளத்தல்.  கொள்-கொண்ட.
பசுங்குருதி-பச்சிரத்தம்.  இன்று-இப்பொழுது.  முகடு - உச்சி.  உரும் - இடி.
எறிந்தஎன-இடித்தாற்போல. மொகு  மொகு  என்பன,  ஒலிமிகுதி  குறிக்கும்
இடைச்சொல். தமருகம் -உடுக்கை.                                (18)

சாதகர் இயல்பு கூறியது

115.தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
 அமரி இன்புறும்அ நாதிவரு சாத கர்களே .

     (பொ-நி.) சாதகர்கள்  சதியின்கண்  வருவார்; (எ-று.)

     (வி-ம்.) தமருகம்-உடுக்கை. சதி-தாள ஒழுங்கு.  அமிரி-காளி. சாதகர்
-காளியின் மெய்காப்பாளர்.                                      (19)

யோகினியர் இயல்பு கூறியது.

116.படைவ லங்கொடுப சுந்தலைஇ டங்கொ டணைவார்
 இடைமொ ழிந்து இடைநு டங்கவரு யோகினிகளே. 

     (பொ-நி.)   மொழிந்து.   நுடங்கவரு   யோகினிகள்   வலங்கொடு
இடங்கொடு அணைவார்; (எ-று.)

     (வி-ம்.)   படை - வாள்.  இடம் - இடப்பக்கம்.  கொடு - கொண்டு. இடைமொழிதல் - இடையிடையே  சில   பேசிக்கொள்ளுதல்.  இடைநுடங்க
-இடுப்புத்  துவள.  யோகினி-காளியின்  பரிவார   மகளிர்.          (20)

பேய் இயல்பு கூறியது

117.வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந்
 திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை
மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய்.

     (பொ-நி.) பேய், மிசைதோறும் திசைதோறும் தலை  விழித்து  நின்று
சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும்; (எ-று.)

     (வி-ம்.)  வீங்குதல்-பருத்தல். நெடுங்கழை-நீண்ட மூங்கில். தூங்குதல்
-தொங்குதல். உறங்குதல்-துயிலுதல்.  சுழல்கண்-சுழற்சி  கொண்ட  கண். சூர்
-அச்சம்.                                                    (21)