பக்கம் எண் :

இந்திரசாலம்67


     (வி-ம்.)அடக்கம்  - செய்து   அடங்கும்  தன்மைத்து.  வெம்மை-
விரும்பத்தகுந்த. கடக்கம் - வங்காள ராச்சியத்திலுள்ள ஓர் ஊர். அபயன்-
குலோத்துங்கன். களப்பெரும்பரணி-போர்க்களத்தில் பெரிய பரணி.   (12)

குதிரை, வீரர் ,யானைப்போர் காட்டிய இந்திரசாலம் கூறியது

165. துஞ்சி வீழ்துரக ராசி பார்! உடல்
     துணிந்து வீழ்குறைது டிப்பபார்!
அஞ்சி யோடுமத யானை பார்உதிர
   ஆறு மோடுவன நூறுபார்.

     (பொ-நி.)  வீழ்துரக  ராசிபார்;  குறை  துடிப்ப பார்; ஓடும் யானை
பார்; உதிர ஆறு ஓடுவன பார் ; (எ-று.)

     (வி-ம்.)துஞ்சுதல் - இறத்தல்.  துரக ராசி -குதிரைக் கூட்டம். குறை
உடல் என இயைக்க.                                        (13)

குருதி வெள்ளம் காட்டிய இந்திரசாலம் கூறியது

166.அற்ற தோளிவைஅ லைப்ப பார்! உவை
     யறாத நீள்குடர்மி தப்பபார்
இற்ற தாள்நரியி ழுப்பபார்! அடி
   யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்!

     (பொ-நி.) தோள்  அலைப்ப  பார்;  குடர் மிதப்ப பார்; தாள் நரி
இழுப்ப பார்; மூளையில் அடி வழுக்கல் பார்; (எ-று.)

     (வி-ம்.)அற்ற - விடுபட்ட. அலைப்ப- குருதிவெள்ளம் அலைத்துச்
செல்லலை. இற்ற - உடலினின்றும் இற்று விழுந்த. தாள் - கால்கள். அடி-
பாதம். இழுக்கும்-வழுக்கும். வழுக்கல்-கால்கள் வழுக்குதல்.         (14)

நிணக்களம் காட்டிய இந்திரசாலம் கூறியது

167.நிணங்கள் பார்! நிணம ணங்க னிந்தன
     நிலங்கள் பார்! நிலம்அ டங்கலும்
பிணங்கள் பார்! இவைகி டக்க நம்முடைய
   பேய லாதசில பேய்கள் பார்!