இதுவும் அது 215 | வேகைக்கு விறகானேம் மெலியா நின்றேம் | | மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகும் காணேம் சாகைக்கித் தனையாசை போதும் பாழிற் சாக்காடும் அரிதாகத் தந்து வைத்தாய். |
(பொ-நி.) விறகானேம்; மெலியா நின்றேம்; உடல் தடிப்பதற்கு விரகும் காணேம்; சாகைக்கு இத்தனை ஆசை; சாக்காடும் அரிதாகத் தந்து வைத்தாய்; (எ-று.) (வி-ம்.)வேகைக்கு-எரிவதற்கு. தடிப்பதற்கு-பருப்பதற்கு.விரகு-ஒருவழி; உபாயம். சாகைக்கு-இறப்பதற்கு. பாழ்-வீண். சாக்காடு-இறப்பு. (4) இதுவும் அது 216 | சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான் | | கீழ்நாங்கள் மேனாட் செய்த பாவத்தா லெம்வயிற்றிற் பசியைத் வைத்தான் பாவியேம் பசிக்கொன்று இல்லேம். |
(பொ-நி.) .சாவத்தாற் பெறுதுமோ; சதுமுகன் மேனாட் செய்த பாவத்தால் பசியை் வைத்தான்; பசிக்கொன்று இல்லேம். (எ-று.) (வி-ம்.)சாவம் - பெரியோர் சாபம். பெறுதும் - பெறுகின்றேமோ (வழுவமைதி.) சதுமுகன்-நான்முகன். (5) இதுவும் அது 217 | பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற் | | பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும் உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோடப் பாராய். |
(பொ-நி.) காற்றடிப்ப, பறக்கின்றோம் ; பசிக்கு அலைந்து தின்று ஒறுவாய் ஆனேம்;அடியேமை ஓடப்பாராய் ;(எ-று.) |