(வி-ம்.) பதடி - பதர். நிலை நில்லாமல்- நிலை பெறாமல் பாதிநாக்கு- நாவில் பாதி. ஒறுவாய்-மூளியான வாய். அடிமையாகிய அடியேம் (அடிமைத் தொழில் செய்வோராய் அடிக்கண் சூழ்ந்து நிற்போம்) என்க. ஓட - ஓடும்படி.பாராய்-பார்க்கமாட்டாய். (6) இதுவும் அது 218 | அகளங்கன் நமக்கிரங்கான் அரசரிடுந் | | திறைக்கருள்வான் அவன்றன் யானை நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம். |
(பொ-நி.) அகளங்கன் இரங்கான்; திறைக்கு அருள்வான் அவன் யானை நிகளம்பூண்டன. அடியேம் உலர்ந்து நெற்றாய் அற்றேம்; (எ-று.) (வி-ம்.) அகளங்கன் - குலோத்துங்கன். திறை -கப்பம். நிகளம்-யானை கட்டும் சங்கிலி. அற உலர்ந்து -மிகவும் வாடி.நெற்று ஆய்- முதிர்ந்து உலர்ந்த வற்றல் போலாகி; அற்றேம்-அழிந்தேம். (7) இதுவும் அது 219 | மூக்கருகே வழுநாறி முடைநாறி | | உதடுகளுந் துடிப்ப வாயை ஈக்கதுவும் குறியாலுய்ந் திருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் |
(பொ-நி.) மூக்கருக்கே நாறி, உதடுகள் துடிப்ப, வாயை ஈகதுவும் குறியால் உய்ந்திருக்கின்றேம்; அன்றாகில் சாதும்; (எ-று.) (வி-ம்.)வழு-நிணநீர். நாறி-தோன்றி.முடை-புலால். நாறி-வீச்சமெடுத்து. கதுவுதல்.- கவ்வுதல் உய்ந்து - உயிர் பிழைத்து. இன்றே -இப்போதே. சாதும்-இறப்போம். (8) |