முதுபேய் கலிங்கத்துக்கண்ட தீநிமித்தம் மொழியத் தொடங்கியது 220. | என்றுபல கூளிகள் | | இரைத்துரைசெய் போதத்து அன்றிமய வெற்பினிடை நின்றுவரும் அப்பேய். |
(பொ-நி.) கூளிகள் உரைசெய் போது,இமய வெற்பினிடைநின்று வரும் அப்பேய்; (எ-று.) (வி-ம்.) கூளி-பேய். இரைத்து-இரைந்து. போதத்து-வேளையில், அத்து: சாரியை, அன்று-அப்போது. (9) இதுவும் அது 221. | கைதொழுதி றைஞ்சி அடிப | | யேன்வடக லிங்கத்து எய்தியவி டத்துள நிமித்தமிவை கேண்மோ. |
(பொ-நி.) கை தொழுது, இறைஞ்சி, வடகலிங்கத்து எய்திய விடத்து உளநிமித்தம் இவை கேண்மோ; (எ-று.) (வி-ம்.) இறைஞ்சுதல்- தாழ்தல். எய்தல் -அடைதல். நிமித்தம்-சகுனம்; குறிகள். (10) இதுவும் அது 222. | மதக்கரி மருப்பிற மதம்புலரு மாலோ | | மடப்பிடி மருட்பெழ மதம்பொழியு மாலோ கதிர்ச்சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ காலமுகில் செங்குருதி காலவரு மாலோ. |
(பொ-நி.) மதக்கரி மதம்புலரும்; மடப்பிடிமதம்பொழியும்; விளக்கொளி கறுத்து எரியும்; முகில் குருதி காலவரும்; (எ-று.) |