(பொ-நி.) நெடுமால் முன் ஒருநாள் தேவர் குறையிரப்ப, தேவகி திருவயிற்றில், அவதாரம் செய்தபின்னை; (எ-று.) (வி-ம்.) அவதாரம்-பிறத்தல். குறை இரத்தல்-குறை சொல்லி இரத்தல் என்க (2) கண்ணன் குலோத்துங்கனாகப் பிறந்தது 234 | இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி | | இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன் அருள் திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையி னவதரித்தா னவனே மீள. |
(பொ-நி.) அவனே, மீள, விதுகுலத்தோன் தேவி, இராசராசன் அருள்திருவின் வயிற்றில் வந்து தோன்றி; (எ-று.) (வி-ம்.)விது - திங்கள். விதுகுலம்- சளுக்கர்குலம். விதுகுலத்தோன்; இராசராசேந்திரன். விதுகுலத்தோன் தேவி: அம்மங்கை, இகல் - வெற்றி. தபனன்-ஞாயிறு. தபனகுலம், சோழர்குலம். இராசராசன் இராசேந்திரனாகிய கங்கைகொண்ட சோழன். இராசராசன் அருள்திரு -அம்மங்கை. ஆலிலையில் அவதரித்தான்; கண்ணன், மீள-மீண்டும். (3) குலோத்துங்கன் பிறந்த சிறப்பு 235 | வந்தருளி அவதாரஞ் செய்தலுநம் | | மண்ணுலகும் மறைகள் நான்கும் அந்தரநீங் கினஎன்ன அந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. | (பொ-நி.) அவதாரம் செய்தலும், அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி எழுந்தது; (எ-று.) (வி-ம்.) அந்தரம்-கேடு; தேவருலகம். துந்துமி - பேரிகை, முழங்கி- ஒலித்து. (4) குலோத்துங்கனைப் பாட்டியார் கண்டு மகிழ்ந்தது 236 | அலர்மழைபோல் மழைபொழிய அதுகண்டு | | கங்கைகொண்ட சோழன் தேவி குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையான் எடுத்துக் கொண்டே. | |