பக்கம் எண் :

96

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

வழங்கும் திருக்கருவையில் உள்ள திருக்கோயிலுள் யான் (பயபக்தியால்) மெல்லப்புகுந்து சென்று கண்டவுடனே (எனது பேரின்ப) வேட்கை தீர்ந்தது.

    கருவைத் திருக்கோயிலினுட் சென்று ஆண்டெழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்த மாத்திரையானே பேரின்பப்பேறு பெற்றவ னாயினேன் என்பது கருத்து.

    உள்ளது-இல்லது, பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் கள்.  உய்த்துணரல்-ஆராய்ந்தறிதல். உணரா, இருந்திடா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாதலின் உணராக் கள்ளர் இருந்திடாக் கனி என வலி மிக்கது.  இருந்திடா-பொருந்தாத ; கனியை வாயிற் பொருந்த இடார், இட்டாலும் அது வாயிற் பொருந்திச் சுவை முதலிய பயன்களைத் தராதெனவும் ; சிவபெருமான் புகழை நாவாற் சொல்லார், சொல்லினும் உள்ளமின்புறுதல் முதலிய பயன்களைப் பெறார் எனவும் பொருள்படும். எனவே மெய்யர் அவன் புகழைப் பேசுவார், பேசிப் பல பயன்களையும் பெறுவார் என்பன அருத்தாபத்தியாற் பெறப்படும்.  அருந்திடா, எனவும் இனித்திடா எனவும் பாடங்கொள்வாருமுளர். தெள்ளு செந்தமிழ்-தெளிந்த செவ்விய தமிழ்.  தெளிந்த-மாசுநீங்க வடித்த ; ‘ வடித்த நுண்ணூல் ’ ‘ வடித்தநூற் கேள்வியார் ’ என்றார் சிந்தாமணியாரும்.  ஆரியம் போல, முப்பதெழுத்துக்களை ஐம்பத்து மூன்றாக விரித்தலும், ஒருமை பன்மைகளை ஒருமை இருமை பன்மையென விகற்பித்தலும், உவமை ஒன்றனையே எண்ணிறந் தனவாகப் பெருக்கலும் முதலாயின செய்யாது வரையறைப்படும் இலக்கணமே கொண்டதாகலின் ‘ தெள்ளு தமிழ் ’ எனவும் ; உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடும், வினையாற் றிணைபாலாதிய உணர்த்தலும், அகம்புறம் என்ற பொருட் பாகுபாடும் இவை போல்வன பிறவும் கொண்டு முற்ற முடிந்த இலக்கண முடையதாதலின் செந்தமிழ் எனவும் கூறினார். சினகரம்-கோயில் ; ‘ ஜினக்ருஹம் ’ என்பதன் சிதைவென்பர்.  மெள்ள-மெல்ல என்பதன் மருஉ. விடாய்-(பிறவித் துன்பத்