பக்கம் எண் :

137

லேந்திய வேடனின் காலில், சேடுஆக வல்விடம் தீண்டவே - நன்றாகக்
கொடிய நஞ்சையுடைய பாம்பு கடித்தலால், அவன் விழ - அவ்வேடன்
(உயிர்நீங்கி) விழவும், சிலையில், தொடுத்த வாளி சென்று - வில்லில்
பூட்டிய அம்புபோய் இராசாளி மெய் தைத்து விழ - இராசாளியின் உடலில்
தைத்ததனால் அதுவும் இறந்துவிழவும், அ இரு சிறைப்புறா வாழ்ந்த
அன்றோ - சிறகுகளையுடைய அந்த இரண்டு புறாக்காளும் உயிர் தப்பின
அல்லவா?, இவையெலாம் சிவன் செயல்கள் அல்லாது - இவைகளெல்லாம்
சிவபிரானுடைய செயல்களே அன்றி, மனச்செயலினாலும் வாடாமல் வருமோ?
- (ஒருவருடைய) உளவலிமையினாலும் தவறாமல் உண்டாகுமோ?

     (கருத்து) ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.?           (85)

          86. செய்யுளின் இயல்

எழுத்தசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையா
     திருக்கவே வேண்டும்அப்பா
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்
     பினியசொற் கமையவேண்டும்

அழுத்தம்மிகு குறளினுக் கொப்பாக வேபொருள்
     அடக்கமும் இருக்கவேண்டும்
அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன்
     அலங்காரம் உற்றதுறையில்

பழுத்துளம் உவந்தோசை உற்றுவரல் வேண்டும்
     படிக்கும்இசை கூடல்வேண்டும்
பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை
     பாடிற் சிறப்பென்பர்காண்

மழுத்தினம் செங்கைதனில் வைத்தகங் காளன் அருள்
     மைந்தன் என வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.