விழலுக்
கிறைத்திட்ட தண்ணீரும் முகம்மாய
வேசைக் களித்தபொருளும்
வீணருக் கேசெய்த நன்றியும் பலனில்லை
விருதா இ தென்பர்கண்டாய்
மழலைப்
பசுங்கிள்ளை முன்கைமலை மங்கைதரு
வண்ணக் குழந்தைமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மழலைப்
பசுங்கிள்ளை முன்கை மலைமங்கை தருவண்ணம்
குழந்தை முருகா - திருந்தாத மொழிகளையுடைய பச்சைக்கிளியை
முன்கையில் வைத்துக் களிக்கும் பார்வதி பெற்ற அழகிய குழந்தையான
முருகனே!, மயிலேறி............குமரேசனே!-, அழலுக்குளே விட்ட நெய்யும் -
நெருப்பில் வார்த்த நெய்யும், பெருக்கு ஆன ஆற்றில் கரைத்த புளியும் -
வெள்ளமான ஆற்றிலே கரைத்திட்ட புளியும், அரிது ஆன கமரில்
கவிழ்த்திட்ட பாலும் - அருமையான நிலவெடிப்பிலே கவிழ்த்த பாலும்,
வரும் அலகைகட்கு இடுபூசையும் - வருகின்ற பேய்களுக்குச் செய்யும்
வழிபாடும், சுழல் பெருங்காற்றினில் வெடித்த பஞ்சும் - சுழன்று வீசும்
பெரிய காற்றிலே வெடித்திருக்கும் பஞ்சும், மணல்சொரி நறும்பனி நீரும் -
மணலிலே வார்த்த மணமிக்க பனிநீரும் சொல்லரிய நீள்காட்டுக்கு எரித்த
நிலவும் கூறுதற்கரிய பெரிய காட்டிலே பொழிந்த நிலவின் ஒளியும், கடல்
சுழிக்குள்ளே விடு கப்பலும் - கடலிற் சுழித்து நிற்கும் பகுதியிலே
செலுத்தப்பட்ட கப்பலும், விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் - விழலுக்குப்
பாய்ச்சிய குளிர்ந்த நீரும், முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் -
முகப்பார்வையினால் மயக்கும் பரத்தைக்குக் கொடுத்த செல்வமும்,
வீணருக்கே செய்த நன்றியும் - பயனற்றவர்களுக்குச் செய்யும் நலமும்,
பலன் இல்லை - பயன் தராதவை; இது விருதா என்பர் -
இவ்வகைச்செய்கை வீண் என்று கூறுவர்
கண்டாய் : முன்னிலை
அசைச்சொல்.
(கருத்து)
இங்குக்
கூறியவை பயனற்ற செய்கைகள். (93)
|