(கருத்து)
பெற்றவனைப் போலவே வளர்த்தவன், கல்வி கற்பித்தவன்,
மறை சொல்லிக் கொடுத்தவன், அரசன், உற்ற இடத்தில் துணைசெய்தவன்,
தமையன், மனைவியின் தந்தை, வறுமையை நீக்கியவன் ஆகிய இவர்களும்
ஒருவனுக்குத் தந்தை முறையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். (6)
7.
ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை
சத்தியம்
தவறா திருப்பவ ரிடத்தினிற்
சார்ந்துதிரு மாதிருக்கும்;
சந்ததம் திருமாதிருக்கும் இடந்தனில்
தனதுபாக் கியம்இருக்கும்;
மெய்த்துவரு
பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களையிருக்கும்;
விண்டுவின் களைபூண் டிருக்கும் இடந்தனில்
மிக்கான தயையிருக்கும்;
பத்தியுடன்
இனியதயை உள்ளவர் இடந்தனிற்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனிற் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை
மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயில் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|
(இ-ள்.)
சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் திருமாது சார்ந்து
இருக்கும் - உண்மை வழுவாமல் நடப்பவரிடத்தில் திருமகள்
அடைந்திருப்பாள், திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது
பாக்கியம் இருக்கும் - திருமகள் வாழும் இடத்திலே எப்போதும் அவளாற்
கொடுக்கப்பெறும் செல்வம் இருக்கும், மெய்த்துவரு பாக்கியம் இருக்கும்
இடந்தனில் விண்டுவின் களையிருக்கும் - உண்மையாக வருகின்ற
செல்வம் இருக்கு மிடத்திலே திருமாலின்
|