பக்கம் எண் :

104

     (க-ரை) சேடர் குலத்தலைவன் மகள், நட்ட கழுவிற் சத்தியஞ்
செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகமணிந்த
இளமையனான காங்கேயனை ஈன்று பெரும் புகழ் பெற்றவளுங் கொங்கு
மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- காங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில்
சேடகுலத்த தலைவனுக்கு ஒரு பெண் வெண்மை நிறமாகப் பிறந்தது.
கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திருந்து வந்திருந்த பொருளந்தை
குலத்து வாலிபனுக்கு விவாகஞ் செய்து கொடுக்கப்பட்டது. விவாக கால
ஒப்பந்தப் படிக்குக் காடையூர்க் காணி முதலிய உரிமைகளை அந்த
வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்தனர். கூடிய
சபையின் தீர்மானப்படிக்கு நட்ட கழுவில் அப்பெண் கையறைந்து
சத்தியஞ் செய்து உரிமைகளை அடைந்தனள். அப்பெண்மணியின்
குழந்தைக்குக் கல்வி கற்பிக்கும் பொருட்டு, சில தேர்ந்த தமிழ்ப்
புலவர்களைச் சேர்த்துச் சங்கமாக்கினள். கல்வி கற்ற சிறுவன், பாண்டிய
வேந்தன் போர் வீரரிற் சேர்ந்து, சண்டை நடத்தி வெற்றி பெற்றதற்கு
மகிழ்ந்து காங்கேயன் என்ற பட்டமும் மற்றும் ராஜ சின்னங்களாகிய
மாலை கொடி முதலியனவும் கொடுத்தனன். இதுவன்றிப்பின்பு இம்முடிக்
காங்கேயன் - மன்றாடி என்ற பட்டங்களை இவன் சந்ததியார்
அடைந்திருக்கிறார்கள்.

                    கட்டி முதலி

76.கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன்னீர்
வற்றா துயரட்ட கோணக் குளமும் வகுத்ததன்றிச்
சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்
மற்றார்க் கிலையெனக் கொள்கட்டி யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) சிற்பநூற் புலவர்கள் வியப்புறத்தக்க கற்பணிக் கோயிலும்,
எண்கோணமான குளமும் செய்ததல்லாது, சதுரங்கம். வில் - மீன் - புலி
முதலிய விருதுக் கொடிகளைஞ் சிறப்பாகக் கொண்ட கட்டி முதலியுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- சிற்ப வேலை பேசுபவர்கள் தாரமங்கலம் - தாடிக்
கொம்பு என்னும் இரண்டு ஆலய வேலை நீங்கலாக மற்றும் எந்தக்
கோயிற் கற்பணிபோலவேனுஞ் செய்து கொடுக்கிறோமென்று பேசுவது
வழக்கமாம். வெகு அருமைப் பாடான வேலை செய்திருப்பதை நாளும்
பார்க்கலாம். தாரமங்கலம் கோயில்முன் மண்டபத்