பக்கம் எண் :

106

                       (மேற்)

தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையி
லன்ன மளித்த அன்னத் தியாகி -

(முளசையார் மெய்க்கீர்த்தி)

மாசிவிழாப் பூசவிழா வைகாசித் திருநாண்மண்டபங்கடாமும்
பூசைபடி தினமாறு படிமாலை திருவிளக்கும் புரிந்தெந்நாளுஞ்
தேசமது புகழ்ந்திடவே யேவைவளம் பதியன்னத் தியாகராசர்
நேசமுடன் பணிமலைவா ழுமைபாகர் தமைவணங்கி நிலைநின்றாரே

(திருச் - திருப்பணிமாலை)

     இவன் மரபினனொருவன், அடங்காத மரக்குதிரையேறி அடக்கிய
வன்மையை வியந்த பாண்டியன், பெருத்த வெகுமதியும் அதிகாரமுங்
கொடுக்கப் பெற்றுள்ளான் என்ற சரித்திரமுமிருக்கிறது.

     அன்னத்தியாக பட்டன் என்கிற ஒருபுலவர் குடும்பத்தார்
இன்னுமிருக்கிறார்கள்.

                   காழிப்புலவன்

78.பரந்த கடலுல கெல்லா மறியப் பரமசிவ
னிரந்தர மாயருள் சண்முக வேலனன் னேயத்தினாற்
புரந்தரன் போற்றும் நெருவூரிற் காழிப் புலவன்பட்ட
மரந்தழை யக்கவி பாடிய துங்கொங்கு மண்டலமே

     (க-ரை) சுப்பிரமணியர் அருளைக் கொண்டு நெருவூரிற் பட்ட
மரத்தைத் துளிர்விட்டுத் தழைக்கும்படி தமிழ்க்கவி பாடிய காளிப்
புலவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- தொண்டை மண்டலத்து வல்லம் என்னுமூரில்
இடையர்களிலே கல்வி கேள்விகளிற் சிறந்த நம்பிகாளி என ஒரு
வித்வான் வாழ்ந்தனர். இவன் நெற்குன்றஞ் சென்று பெருங்
கொடைவள்ளலாக விளங்கும், களப்பாளராஜன் என்னும் நெற்குன்றவாண
முதலி மீது ஒரு பிரபந்தம் பாடினன். தமிழ் அறிவிற் சிறந்த அம்முதலியார்
இவர் பாடிய பிரபந்தத்தின் உயர்வை நோக்கித் தன் ஊர், வீடு முதலிய
பொருள்களைத் கொடுத்ததுமன்றித் தானும் அடிமையாய்விட்டனர். பெற்றுக்
கொண்ட வித்வான், கொடை வள்ளலை அடிமையினின்று நீக்கிவிட்டனன்.
பின்பு திருப்புகலூரையடைந்து சிவபெருமான் மீது அக்களப்பாளர்
திருப்புகலூரந்தாதி பாடினரெனக் கூறுவர்.