பக்கம் எண் :

134

இருபாலர்க்கும் ஒப்ப வழங்குதலானே தெளிவாம். கற்றாருள்ளும்
நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர் பெருமை அளப்பரிய தொன்றாகும்.

     உலகம் பொல்லார் உறவை விடுத்து நல்லோரிணக்கங்கொண்டு
யாவரிடத்தும் அன்பு கொண்டு நடக்குமாறு செய்வதே தொழிலாக
உடையவர்கள் தமிழாய்ந்த புலவர்கள். அவர்கள் ஒருவனிடத்துள்ள
குற்றங்களை எடுத்துப் பிற இடத்தும், எதிரிலும் அஞ்சாது இடித்துரைப்பர்.
இதனால் அவர்களைச் சிலர் வெறுப்பர்; அவர் அறியார். அவர்களுக்கு
வேண்டுவன உதவிச் சிலர் அவர் கூறும் இசை மொழியைக் கேட்டு
மகிழ்வர். இதனால் உலகம் நல்வழிப்பட்டு ஒழுகும். அப்புலவர்கள்
உலகினர்களுக்கு கீதோபதேசஞ் செய்தலே பொழுதுபோக்காக இருப்பதால்,
தங்கள் குடும்ப நிர்வாகம் கஷ்டமாக நடக்க வேண்டி இருக்கும் ஆதலின்
தங்கள் முக ஒளி இழந்து எனக்கு இது தா என்று கேட்க நாணுவார்கள்
என்று நினைந்து, தன் வீட்டு முகப்பில் ஒரு எழுத்தாணியும் ஓலையும்
தொங்க விட்டிருப்பர். சென்ற புலவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அதில்
எழுதிவிடுவார்கள். ஏவலாளர்கள் உடனே அதை எடுத்துப் போய்க்
கொடுப்பர். அவற்றை முன்னே உதவிப் பின்பு அப்புலவர்களைப் பார்ப்பது
அவ்வுபகாரியின் கொள்கை. நேரிற் கண்டு சந்தோஷ மொழிகள் பேசி
அடிக்கடி வந்து கொண்டிருக்க வேண்டுமென்று பல முறை இரந்து கூறி
வழியனுப்புவர் என்பர்.

     வாணராயர் என்ற பட்டப்பெயரை உடையவர்களாய் சமத்தூர் ஜமீன்
(பாளையப்பட்டு) மரபினர் வாழ்கிறார்கள். அவர்கள் பவள குலத்தவர்களே,
சமத்தூர் சோழீசர் கோயிலிலும் இவ்வூருக்கு 3 மயிலில் பாலாற்றங்
கரையிலுள்ள சித்தாண்டீசுரர் ஆலயத்தும் வாணராயன், வாணாதிராயன்,
வாணவராயன் என்றுள்ள கல்வெட்டுகளிருக்கின்றன. பிரித்து அடுக்கும்
பொழுது சில கற்கள் அற்றுப் போனதால் சரியாகவில்லை. ஆனால்
வீரராஜேந்திரன் விக்கிரம சோழன் சாசனங்களிருக்கின்றன.

     சேரமான் பெருமான் என்னும் அரசனால் சகம் 713 என்று கண்டு
இவர்களிடத்துள்ள ஒரு தாம்பிர சாசனத்தாலும் இம்மரபினர் ஒரு சாமய்ய
தியாகராஜ பண்டிதருக்குக் கொடுத்த நிலதான சாசனத்தாலும் இவர்கள்
பூர்வ சரித்திரம் தெரிகிறது. ஆனகுந்தி சமஸ்தானத்தரசர்கள் இவர்களின்
முன்னோரில் ஒருவருக்கு வளர் கடாயைக்காதறுத்த வணங்காமுடி
வாணராயன் என்ற பட்டப்பெயர் கொடுத்திருக்கிறார்கள். கோயமுத்தூர்
ஜில்லா பொள்ளாச்சித்