பக்கம் எண் :

136

என்று கூற அக்குதிரை வீழ்ந்திறந்தது. அரசன் குதிரை யென்றறிந்த
ஆசிரியர் பயந்து நடுங்கி நிற்க முன் சொல்லிய வெண்பாவின்
ஈற்றடியினைக் "குதிரைமீளக் கொண்டுவா" என மாற்றிக் கூற குதிரை
உயிர்த்தெழுந்தது. அவருடைய ஆசிரியர்,

"புவியி லகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்
 சிதைவில் புலவர் சிறப்பாய்த் - துதி செய்யச்
 செங்காட்டங் கோட்டத் துறையூ ரெனுந்தலத்தில்
 தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்"

என வாழ்த்தினர். குமாரக்கடவுள் இவர்பால் வெளிப்பட்டுத் தம்மை
பாடும்படி கேட்க, பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவதா என்றனர்
என்று கதை கூறுவாருமுளர்.

     சில நாளின் பின் தமிழ் நாட்டினர் இவரைக் கொண்டாடினார்கள்.
அகப்பொருள் புறப்பொருள் கூறுவதில் தமக்கு மிக்காரும் ஒப்பாரும்
இல்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மதுரைத் தமிழ் சங்கத்தை
நிலை நிறுத்தும் நோக்கமாகக் கொங்கு நாட்டின் வழிக்கொண்டு சென்றனர்.
அப்பொழுது கலையுரை புலவராகிய முருகவேள் வேடுருவங்கொண்டு
"செல்வோன் யார்" என வினவ, நாம் புலவரெனப் புலவனாகில் இப்பாலை
நிலத்தைச் சிறப்பித்துச் சுரம் போக்காக ஒரு வெண்பாக் கூறுகவென,
புலவர் உன் பெயர் யாது என்றனர். என்பெயர் முட்டை யெனவே,

பொன்போலுங் கள்ளிப் பொரீபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைத்தனளே - மின்போலு
மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேன் முட்டைக்குங்காடு

எனக்கூறி அக்கவி அவ்வளவு சிறந்து விளங்கவில்லை யென்னு முருகவேள்,

விழுந்துளி யந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்

எனத் திருவாய் மலர்ந்தருளினதை வினவி குமாரக்கடவுளெனத்
துதித்து வணங்கித் துதிக்க வெளிப்படையாகி அருள் சுரந்து நாவில்
வேற்படையூன்றிச் சென்றனர் இதனை அருணகிரிநாதரும்,

                         (மேற்)

முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்டமு ரட்டுப்புலவனை
முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே.