பக்கம் எண் :

164

யதிகாரிகள் அவனையடித்துத் துன்புறுத்தியதும் அல்லாமல் அவன்
தரித்திருந்த சிவலிங்கத்தைப் பறித்துக் குளத்தில் எறியச்செய்து அவனை
வேலைக்கு இழுத்துப் போயினர். வேலை முடிந்தபின் எனக்குரிய
பூசாலிங்கம் கிடைத்தாலன்றி உயிர் வாழ்வதில்லை என்று குளத்தில்
குதித்து உயிர்துறக்கத் துணிந்தான், அப்பொழுது குளத்திலிருந்த ஒரு மீன்
அவ்விலிங்கத்தைக் கவ்விக் கொண்டு வந்து அவன்கையில் கொடுத்தது.
அவன் அதனைப் பெற்று மகிழ்ந்தான்.

'சங்கது சூழும் தாமரைவாவிதான் முறியீழுவ மடத்துச்
 சங்கமலிங்க தாரனையவனைத் தானடித்தாள்களுந் தள்ள
 லிங்க மதனைத் தெப்பநற் குளத்தில் நெறியின்அவன் எறிந்து
                                    போயினதை
 வங்கது மீன் கொண்டருள் செய்புக்கொளியூர் வளர்பெருங்
                                    கருணைநாயகியே

(புக்கொளியூர்மாலை - 54)

     மீன் சிவலிங்கத்தோடு வந்த திருவுருவம் அவிநாசிக்கோவில்
தீபஸ்தம்பக் குறட்டிலும், சிவலிங்கம் பெற்றுப் பூசித்த திருவுருவம்
கோபுரவாயிலின் வடதிசை ஆலயத்திலும் உள்ளன. சேவூர்,
மொக்கணீச்சுரம் முதலிய இடங்களிலும் இத்தகைய சிற்பங்கள் உள்ளன.
அவிநாசித் தல புராணத்தில் இவ்வரலாறு கூறப்படவில்லை.

               பஞ்சவில்வம் - அவிநாசி

(13)



விரிந்த கடல் உலகுஎங் கெங்கும் இன்றி விரை மலர்ப்பூ
அரும்பத் திரமோடு அதிசயமாய் அவிநாசியிலே
பரந்த நிழலுடன் ஈசுரர் பூசைக்குப் பஞ்சவில்வ
மரந்தரி கொண்டங்கிருந்தது வுங்கொங்கு மண்டலமே,

     (கு - ரை) விரை - மணம், அரும்பத்திரம் - அரிய வில்வப்
பத்திரம். இறைவன் அக்கினி தாண்டவம் செய்து காசியில் சிவலிங்கத்தில்
மறைந்தருளினார். அத்தாண்டவத்தின்போது பிரணவ வடிவாய்த்
திருவுருவங்கொண்டு இறைவனைப் பிரிந்திருந்த உமாதேவியார் பிரிவால்
வந்த குற்றத்தைப் போக்க வழிபாடு செய்ய விரும்பினார், வழிபாட்டிற்குரிய
சிறந்த இடம் அவிநாசி என்று இறைவன் கூறினன். உவகையுற்ற
உமாதேவியார் உடனே உரிமை மகளிர் புடை சூழ அவிநாசியடைந்தார்.
அங்குச் சந்தனம்,