பக்கம் எண் :

174

     (கு - ரை) காந்தமலை - நாமக்கல் வட்டத்தில் மோகனூரை
யடுத்துள்ளது.

             நாய்க்குட்டிமரம் - மருதமலை

(37)



பாகார் மொழிமட வீர்கடல் சூழுமிப் பாருலகில்
ஆகாய மேவி வளரு மரத்தி லதிசயமாய்
ஏகா வனம்புடை சூழ்கின்ற கொண்ட லிறங்கிவெற்பில்
வாகான நாய்க்குட்டி காய்ப்பது வுங்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) நாய்க்குட்டி மரம் - சுவானக்குட்டி மரம்.

"சுவானக் குட்டிக டொக்கவெனப் புக்க
 கவான் வரைத்தலைக் கண்ட புலிப்பறழ்
 சுவானக் குட்டியிற் காய்பல தோற்றிய
 சுவானக் குட்டி மரமொரு பாலெலாம்

- (பேரூர்ப் புராணம் - மருதவரைப்படலம் 18)

     ரங்கமலையில் இன்னும் இம்மரம் இருப்பதாக கூறுகின்றனர்.

             வாலசுப்பப் புலவன் - வெள்ளோடு

(38)



தந்திர மாய்வந்து வெள்ளோட்டில் வாலசுப் ப்புலவன்
குந்திய தோயக்குலத்தானை வெல்லென் றென மொழியச்
செந்தமிழ் மங்கையில் வாழ்சாமி நாதன் செயித்தவனை
வந்த வழியினி லோட்டி யதுங்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) மங்கை - விசயமங்கலம்: நீ எந்தவூர் என்றதோயக்
குலத்தானுக்கு விடையாக விசயமங்கை சாமிநாதப் புலவன் பாடிய பாடல்.

"காய்மாறாத் தேமாவுங் கத்தரியி லாக்கிணறும்
 பூமாறாக் கொன்றையுள பொற்பதியாம் - நேம
 நறுவீசர் சோலைநெறி நன்னகர்வெள் ளோடைச்
 சருவீசர் வாழுந் தலம்."

- (தனிப்பாட்டு)