(க-ரை)
வழி தெரியாது மயங்கும் ஆளுடைய நம்பிக்கு, வேட
வடிவு கொண்டு வழி கூட்டி வந்து, காட்டு முருங்கையிலை காய் கறியுமாக்கி
விருந்து செய்த விருந்தீசுரர் விளங்குத் துடியலூருங் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு:-
மூவாண்டின் முன் விழுங்கிய முதலை வாயினின்று
பிள்ளை வரப்பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், அவிநாசியினின்றும்
புறப்பட்டுச் செல்லும் வழியில் தடந்தெரியாது அடர்ந்த காட்டிற்
றிகைத்தனர். உலக மீன்ற கன்னி வேடச்சியாயும், எல்லாம் வல்ல கடவுள்
வேட வடிவாயுந் தோன்றி வழிகாட்டிக்கொண்டு துடியலூர்க்குள் புகுந்தனர்.
அம்மையு மப்பரும் மறைந்து விட்டனர். வன்றொண்டர், ஆலயத்துட்
சென்று அகத்தீசரையும், அருந்தவச் செல்வி யம்மையையும் முறையுற
வணங்கிப் பாடிப்பணிந்தனர். உணவருந்திச் செல்க என ஆகாய வாக்குப்
பிறந்தது. கணநாயகர் பலவகையான உணவுடன் காட்டு முருங்கையிலை
காய்க்கறியும் ஆக்கிப்படைத்தனர். பரிசனங்களோடு விருந்துண்டு
கடவுளைப் பாடி வணங்கி விடைகொண்டு சென்றனர். (இது ஆறை நாடு).
(மேற்)
சொல்லருங்
கிராத வேடந் துணைவியுந் தானுங் கொண்டு
மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று
ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித்தி யென்று
வல்லுரந் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே.
கடிய
தானமுட் கான முருங்கையி
னெடிய காயட காதிய நெய்சுவைப்
பொடி விராய பொறித்த புளிக்கின
முடிவி லாத முதிர்கறி பாகரோ
(துடிசைப்புராணம்)
|
நெட்டிசையின்
தமிழ்முனிபூ சனையுகந்து துடிசையில்வாழ்
நிமலர்ப்போற்றி
அட்டில்வினைப் புனமுருங்கை யடகவிரல் லமுதுவிருந்
தளிக்கவுண்டார்
(அவிநாசிப்புராணம்)
திருவினாயக
னாதிய மாலுக்கருள்கள் செய்திடுந் தேவர்
பிரானை
யுருவினானை யொன்றாவறி யொண்ணா மூர்த்தியை
விசயற்கருள் செய்வான்
செருவிலேந்தியோர் கேழற்பின் சென்றுஞ் செங்கண்
வேடனா யென்னோடும் வந்தும்
|
|