பக்கம் எண் :

190

           விசயமங்கலப் போரில் வெற்றிகொண்டது

(71)கூடுவர் கம்பளர் சோனகர் வீரர் குருகுலத்தோர்
ஆடுவர் வெம்பரி வீரரெல் லாம்புக ழைவர்மங்கை
நீடிய வாரணன் சீரங்கன் வடமலை நீண்மைபெற
வாடியல் வேடுவர் தம்மைவென்றார் கொங்கு மண்டலமே.

                தொண்டைமான் - மூலனூர்

(72)கரையது மேல்கரை நாற்பத்தெண் ணாயிரங் கண்டகொங்கில்
முறையது கூறிய ஆதொண்டை மான்வந்து மூவர்சபை
திறையது வாங்கிய பூசனன் றொண்டைமான் செம்மலென
மரபது காத்து நிலைகொள்ளு வோன்கொங்கு மண்டலமே.

               செங்கண்ணன் - காங்கேயம்

(73)


கார்கொடுத் தோன்மீன் கொடிகொடுத் தோன்றென்
                                     கடப்பமலர்த்
தார்கொடுத் தோன்றோட் டடங்கொடுத் தோன்மிகு
                                   தண்டமிழோர்க்
கூர்கொடுத் தோன்ற னுயிர்கொடுத்தோனின் றுதைக்கத்திரு
மார்கொடுத் தோன்செங் கணன்வாழ் திருக்கொங்கு
                                      மண்டலமே.

             உலகுடை மன்றாடி - வெள்ளோடு

(74)பூத்தந்த வானமும் சந்தன மாதும் புனலொழிந்து
தேய்த்தந்த முன்கையிற் சந்தனம் வாரிச் சிவன் மெயினிற்
சாத்தந்தை கோத்திர னுலகுடை யான்செய் தவம்பெருக
வாய்த்தந்தக் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே