பக்கம் எண் :

220

                  மேல்கரை அரயநாடு

19.















என்னிவமெ னுந்தலைசை வெங்கனக ரஞ்சூரு
                     மிம்பர்மகிழ் மொஞ்சனூரும்
     இன்பாக வளர்கொல்லங் கோயில்மிகு கொந்தள
                       மெழிலாக வருகறைசையும்
மன்னவ ருறும்விதரி யெழுநூற்று மங்கலம்
                        வண்மையிள வரசநல்லூர்
     வல்லிபுர கார்வளியி னோடுதுக் காச்சியும்
                       வடிவுடைய நகரூஞ் சலூர்
முன்னிலைமை யாகத் திருக்காடு துறையுடன்
                     முத்தமிழர் கொண்டாடவே
     முற்றுமே யிந்திரன் பதிபோல் விளங்கியே
                      மொய்ம்பேற வேதழைத்து
அன்னவயல் சூழ்கதலி தென்னைமா துளைபுன்னை
                            யரசுநிலை பூகமாதி
     யரியதரு நீடுபூஞ் சோலைசூழ் தோங்குமே
                           லரயநன் னாடுதானே.

தலையநல்லூர் -- சிவகிரி கொடுமுடி கார்வளி
வெங்கம்பூர் விதரி - அத்திப்பாளையம் துக்காச்சி
அஞ்சூர் ஏழுநூற்றுமங்கலம் வடிவுடையமங்கலம்
மொஞ்சனூர் இளவரசநல்லூர் ஊஞ்சலூர்
கொல்லங்கோயில் வல்லிபுரம் திருக்காடுதுறை
கொந்தளம்    

                                                                                                                     ஆக ஊர்கள் - 16

                   கீழ்கரை அரயநாடு

20.







திருவுலவு மிடையாறு திருமல்வன் பொத்தனூர்
                    திகழ்கபிலை பாண்டமங்கை
     தென்கபிலை மாநகர் வெங்கரைசி ராப்பள்ளி
                    சிகசை மருதூர் கொந்தளம்
மருவுலவு மானங்கூர் குன்னம்வட கரையாறை
                    வண்மைசிறு நல்லிகோயில்
     வளர்கொற்ற மங்கைமா தேவிந லிளம்பள்ளி
                    வாய்மைகொ ளிராமதேவம்