|
ஆடை தோய்த்து முழுகிக்
கரையேறிச் சிவலிங்க தரிசனஞ் செய்ய
வேண்டும்; நீ முன் சொல்லிய சிவாலயம் எங்கு இருக்கிறது? என்று
தன்னுடன் வந்த மைத்துனனை வினவினார். இதன் முன்னம் அவரது
மைத்துனன் பரிகாசத்துக்காகக் குதிரைக்குக் கொள்காட்டும் பையில்
மணலை நிரப்பிச் சிவலிங்கம் போல மண்ணில் நட்டு மாலை சாத்தி
வைத்திருந்தான். ஐயா, இதோ சிவபெருமான் இருக்கிறார். தரிசித்து வாரும்
என்று சுட்டினான். சிவபத்தர் மகிழ்ச்சி கொண்டு அச்சிவபெருமானை
இருவிழிகளுங் குளிரக் கண்டு சுயம்பு மூர்த்தியெனக் களங்கமற்ற
மனத்திலிருத்தித் தோத்திரம் புரிந்து வணங்கினர். உணவருந்தத் தொடங்கும்
பொழுது மைத்துனன் இவரை நோக்கி அத்தான்! இன்று சிவதரிசனமின்றிப்
புசிக்கத் தொடங்குகின்றீரே என்றனன். தொழுது வந்தேனே எனவே, அது
சிவலிங்கமல்லவே என்று மைத்துனன் சொல்லிக் கைகொட்டிச் சிரித்துப்
பலபேர்களோடு திருமுன் சென்று முன் புதைத்து வைத்த கொள்ளுப்
பையைத் தூக்கினான்; அசையவில்லை. மண்ணைப் பறிக்கப் பறிக்க அடி
காணவில்லை. சுயம்பு மூர்த்தியாகப் பாதாளம் வரை ஊடுருவி நின்றது
கண்டவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டு "உண்மைப் பத்தி மான்கள் பாவித்த
படி சிவபிரான் விளங்குவார்" என்று நிச்சயித்தார்கள். சிவநேசச் செட்டியார்
உள்ள முருகினர். இதனால் மொக்கணீசுரர் என்று திருநாமம் உண்டாயிற்று.
(இது ஆறை நாடு)
(மேற்)
|
மொக்கணி
யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
(திருவாசகம்
- கீர்த்தித் திருவகவல்)
|
|
பழுதில்கண்
டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி
எழிறரு மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங்
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி
(வேம்பத்தூர்
திருவிளையாடல்)
|
யூற்று என்கிறார்கள்.
இவ்வாலயத்தின் உத்ஸவ மூர்த்திகள் சேவூர்
வாலீசப் பெருமான் கோயிலில் சுமார் முந்நூறு வருஷங்களின் முன்
சேர்க்கப்பட்டதாம். இச்சரிதத்தைச் சுற்றுமுள்ள குடியானவர்களெல்லாரும்
கூறுகிறார்கள்.
|