பக்கம் எண் :

47

     வரலாறு : தகடூர் (தருமபுரியைத்) தலை நகராகக் கொண்டு ஆட்சி
புரிந்து வருபவன் அதிகமான். இவன் கடை யெழுவள்ளலி லொருவன். ஒரு
நாள் பருத்திப்பள்ளி நாட்டிலிருக்குங் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு
என்னும் பாகத்திற் சஞ்சரித்தான். அப்போது ஒரு துறவி ஒரு நெல்லிக்
கனியை அம்மன்னனிடங் கொடுத்து, இந்தக் கனியை உண்டவர்களுக்கு
நரை திரை வராது; நீடித்த நாள் உயிர் பெற்றிருக்கச் செய்யும்; இதனை நீ
அருந்து வையேல் நெடுநாள் நற்புலவர்களை ஆதரித்துத் தமிழை வளர்த்து
நாட்டை நீதியோடு காப்பாய் எனக்கூறிக் கொடுத்தனர். ஏற்றுக் கொண்ட
அதிகமான், அக்கனியை வைத்திருந்து, ஒளவையார் வந்தவுடன் அதன்
வரலாற்றைக் கூறி, நாக்கிழத்தியாரே! இதையுண்டு நீடித்து வாணாள்
கொண்டு அரிய நூள் களியற்றி உலகத்தைத் திருத்துவீர்களெனக் கூறி
ஈந்தனன்.

                    (மேற்)

மால்வரைக் - கமஞ்சூழ் சாரற்க வினியநெல்லி
யமிழ்து விளை தீங்கனி யௌவைக் கீத்த
வுரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக் கடற்றாணை யதிகனும்

                              (சிறுபாணாற்றுப்படை)

பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர                                 சியற்றுங்காற்
காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு                              வந்தனை செய்து

வீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு                                 கருநெல்லித்
தீதிலாக்கனி யொன்றினை யுதவவே* சேரலன்                                 மகிழ்வெய்தி.

இந்த வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி                                 சயமென்னோ
சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங்களி                                    கூர்ந்தே
அந்த நாட் பிரமன்றரு மலையிதி லதிசய சஞ்சீவி
எந்த நாட்களு முளதிதை யுட்கொள நரைதிரை                                 யிவைமாற்றும்

                              (கரபுர நாதர் புராணம்)

 

     இந்நாட்டில் கரும்புப் பயிர் கொண்டு வந்து நட்டார்கள் என்பது:-

அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெரு மரபிற் கரும்பிவட்டந்து

                              (சிறுபாணாற்றுப்படை)



   * சேரலன் = அதிகமான்.