சன்மதி மாமுனி தந்த
மைந்தன் எனத் தொண்டைமண்டல சதகத்தே
கூறுவதால் சனகைப்பதியினரான சன்மதி முனிவரது புத்திரர் எனப் பொருள்
ஆகின்றது. இப்பவணந்தி துறவறத்தினர் என்பதைப் "பவணந்தி - என்னு
நாமத் திருந்தவத்தோனே." (நன்னூல் சிறப்புப் பாயிரம் 22-ஆம் அடி)
என்பதும் நந்தி முனிவர் என வழங்கப்படுதலும் இதனை வலியுறுத்துகின்றன.
ஜைனருள் துறவினர் நந்தி என்று வழங்கப்படுதலை வச்சணந்தி அச்சணந்தி
என்னும் பெயர் வழக்குகளாலும்,
(மேற்)
கனக நந்தியும்
புட்பநந்தியும் பவண நந்தியும் குமணமா
சுனக நந்தியும் குனக நந்தியும் திவணநந்தியும்'
|
எனச் சம்பந்தமூர்த்தி
சுவாமிகள் திருவாலவாய்த் தேவாரப் பாசுரங்களானுந்
தெரியப்படுகிறது. ஆதலின் சன்மதி மாமுனியும், பவணந்தி முனிவரும்
துறவிகளானதால் ஞானபிதாவும், ஞான புத்திரருமாவார்கள். எனவே
பவணந்தி பிறந்து வளர்ந்தது கொங்கு மண்டலமும், சன்மதி முனிவரிடம்
உபதேசம் பெற்றுத் துறவு பூண்டிருந்தது தொண்டை மண்டலமுமாகக்
கொள்ளல் வேண்டும்.
பவணந்தி
முனிவர் பிறந்து வளர்ந்த (சீனாபுரம்) சனகை என்பது
கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு தாலூகாவில் பெருந்துறை ரயில்
ஸ்டேஷனுக்குச் சமீபத்திலிருக்கிறது. இவ்விடத்தில் ஆதி நாத தீர்த்தங்கரர்
கோயிலிருக்கிறது. ஜைனப் பிராமணர்கள் இன்னும் பூசித்து வருகிறார்கள்.
சன்மதி
முனிவரைக் குறிக்கும் சனகையென்கிற சனநாத புரமானது
காவேரியின் வடகரையிலுள்ள மாவிலங்கை யாக வேண்டும். இப்பொழுது
மைசூர் ஜில்லா திருமுக்கூடல் நரசபுரந்தாலூகாவைச் சேர்ந்தது அந்தக்
கிராமம். இது கங்க ராஜ்ஜியத்திலேயே இருக்கிறது. இதற்குக் கங்க நாட்டுப்
பழய ராஜதானியாகிய தலைக்காட்டுக்கும் இடையே காவேரிதானிருக்கிறது.
இதைக் குறித்து சாசனங்களில் அடியில் வருமாறு காணப்படுகிறது.
I.
முடி கொண்ட சோழமண்டலத்து கங்கை கொண்ட சோழவள
நாட்டு இடைநாட்டு ஜனநாத புரத்து
|