தோன்றிய எரிச்சலைப்
பொறுக்க முடியாது வெளியேறிச் சாரி கொண்டது.
அவ்வேகத்திலேயே அந்நகர் வீதிசுற்றி ஆட்டுவித்து அரசன்முன்
கொண்டுவந்து வந்தனஞ் செய்தனன். இவனது யுத்தியை மெச்சிய அரசன்
பூந்துறை நாட்டு அதிகாரமும் மற்றும் அதிகாரமும் கொடுத்தனுப்பினன்.
"இவ்வகை
வழக்கம் அக்காலத்து இருந்தது என்பதற்கு எட்டயபுர
சமஸ்தானத்து வம்சமணி தீபிகை மூன்றாவது பிரகரணத்தில் 12 - ஆவது
பட்டம் நல்லம நாய்க்கரவர்கள் விஜயநகரஞ் சென்றிருந்த காலத்தில்
தெற்கு வாசலில் சோமன் என்ற மல்ல வீரன் இவ்விதம் இடது காலில்
தங்கச் சங்கிலி கட்டிக்கொண்டிருந்ததாகவும், அவனைக் கொன்று உள்ளே
நுழைந்ததாகவும்" எழுதப்பட்டிருக்கிறது.
சுண்ணாம்புக்கல்
கட்டுதல் முதலிய யோசனைக்கு உடனிருந்து உதவி
புரிந்த ஒரு உப்பிலிய நல்லயன் என்பவனுக்கு இந்த நாட்டதிகாரி ஒரு
மரியாதை கொடுத்தனன். அது இது :-
பூந்துறையில்
செதுக்கிய கல்லால் ஒரு மேடை கட்டப்பட்டிருக்கிறது.
ஜாதி ஞாயம் உப்பிலியர் அம்மேடை மேலிருந்து பேசுவர். அப்பொழுது
மேலோர் அங்கு வரினும் உட்கார்ந்தபடியே பேசலாம் என்பதாம்.
அம்மேடையினிருபுறச் சுவரிலும் குதிரையைப் பிடித்தல் சுண்ணாம்புக்கல்
கட்டல், சாரி செய்தல் முதலிய குறிகள் வெட்டப்பட்டிருக்கின்றன.
பூந்துறை
புட்பவன நாதர் ஆலயத்துள் பாகம் பிரியா நாயகியார்
கர்ப்பக்கிரக இடப்புறச் சுவரில் அக்கோவில்களில் திருப்பணி செய்துள்ள
குப்பன் அழைப்பித்தான் எனக் கண்டுள்ளவர்களுள் குப்பன் (குப்பிச்சி)
இவனாம். விஜய நகரம் சதாசிவராயர், ராம ராஜா சாசனங்கள் இங்கு
காணப்படுகின்றன. இவர்களுடைய காலம் கி.பி. 1541 முதல் 1565 வரை.
எனவே இன்றைக்க 380 ஆண்டுகளாகின்றன.
(மேற்)
விஜய
நகரத்து மேவியிருக்கும்
அசையா நரபதித னன்பா - லிசைவு பெறக்
கொங்குக்கு மேன்மைக் குறிப்பு மணியிழைத்த
தங்கப்பொற் றண்டிகையுந் தான் படைத்தோன்.
(பூந்துறை
அவிநாசிக்கவுண்டன் வண்டு விடு தூது)
|
|