பக்கம் எண் :

86

கொங்கு மண்டலமும் பெருமைபெற ஒரு இராமாயணம் பாட
வேண்டுமென்று காங்கேயர் பெரிதும் வேண்டினர். உங்களிருவர் புகழும்
வளர்ந்தோங்கும் என்றெல்லோரும் ஒருங்கே கூறினர். ஸ்ரீ ராமபிரான்
கடாக்ஷமிருக்கின் நிறைவேறுமென்று கவிராயர் மகிழ்ச்சியோடு புகன்றனர்.
ஒருநாள் அக்கோட்டையுள் விளங்கும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியை
யடைந்து இவ்வெண்ணத்தை விண்ணப்பித்து நிற்கையில் 'உலகமாதா' என்று
தோன்றிய மொழியை மங்கலச் சொல்லாக் கொண்டு தக்கையிசையால்
ராமாயணம் பாடத் தொடங்கினர். காண்டங்கள், சில படலங்களின்
தலைப்பில் வெண்பாவும் மற்றையன தக்கை ஒற்றை இரட்டையென்னும்
குடகம் முதலியவரிப் பாட்டுகளும் அங்கங்கு அமைந்து ஆறு காண்டமாய்க்
கம்பர் கருத்தைத் தழுவிப் பாடிமுடித்தனர்.

     இது கேள்வியுற்று மதுரைச் சமஸ்தானபதிகள் கவிராயர் மீதும்
காங்கேயன் மீதும் மிகுந்த கௌரவம் பாராட்டினார்கள். பாடுகவெனக்
கேட்டுக்கொண்ட காங்கேயனை அங்கங்கே சிறப்பித்திருக்கிறார். *மேற்கு
ரங்கம் என்று புகழ்ந்து பேசும் சங்ககிரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
சந்நிதியின் அரங்கேற்றப் பட்டது என்பர்.

                         (மேற்)

மெத்த வேகண்ணன் வெண்ணெய் தனில் விருத்தசீரா
                              ராமாயணத்தைச்
சுத்தநாக் கம்ப நாடன் சொன்னான் சொன்ன பொருள்
                            தக்கை யிசையாலே
பத்தர் பாடியெம் பெருமானாற் பகரும் படிசெய்தான்
                                  மோரூராள்
அர்த்த நாரிசொ னல்லதம்பி யமலனருள் பெற்று                                   வாழ்வாரே.

                                   (தக்கை ராமாயணம்)

     இந்த நல்லதம்பிக் காங்கேயன் பலபிரபந்தங்கள் கேட்டிருக்கிறான்
திருச்செங்கோட்டிற் பல கற்பணிகளும் கட்டளைகளுஞ் செய்திருக்கிறான்.
இவனுடைய சிலாசாசனம் ஒன்று இங்கே காட்டப்படுகிறது. செங்கோட்டு
வேலர் கற்பக்கிரக வடசுவரில்:-

     ஸ்வஸ்தி ஸ்ரீ சகாப்தம் (1521) இதன் மேற்செல்லா நின்ற சார்வரி
சித்திரை மாதம் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் மோரூரில் இருக்கும்
வேளாளக் கண்ணர்களில் திருமலை அத்தப்ப நல்ல தம்பிக் காங்கேயன்
உபயம்.


     * மைசூர் தாதா கிருஷ்ண ராஜா சாலிசக - 1639 கி.பி. 1717
       ஏவிளம்பியில் தானஞ் செய்த ஒரு சாசனம் 64வது சுலோகம்.