அறிவி
லிளைஞரே ஆண்மக்கண் மாதர்
அறிவின் முதிஞரே யாவர் - அறிகரியோ
தான் கொண்ட சூலறிவர் தத்தைய ராண் மக்கள்
தான் கொண்ட சூலறியார் தான். |
என்பது
இதனை
வாசித்து வியப்புற்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப்
பேச நாணங் கொண்டு திகைத்து இருந்தனர். சென்று வந்த பத்தர் பாடி,
இவரை வரவேற்று நல்வரவு கூறிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
சீட்டைப் புலவர்கள் காட்டினார்கள். முறுவலித்து ஆண்மக்களை இழித்துக்
கூறலாமோ என மனைவியை வினவினர். அந்நங்கையார் மனையுளிருந்தே
ஐய, இகழவில்லையே. ஆன்மாவானது நீர்த்துளி வழி பூமியிற் சேர்ந்து
உணவு வழியாகப் புருஷ கற்பத்துத் தங்கிப் பெண்ணின் கருப்பையுற்றுக்
கற்பமுற்றிச் சிசு பிறக்கிறது; என்பதை உபநிஷதம் முதலிய பேராதரவு காட்டி
நிலைநாட்டினர். ஆதலின் பெண்கள் தாங்கள் கருக்கொண்டதை அறிந்து
கொள்வது போல ஆண் மக்கள், தாங்கள் கருப்பமுற்றதைத் தெரிந்திலர்
என்றனர்.
உயிர்கள்
அச்சுமாறிப் பிறத்தலை பிரமசூத்திரம் 3-ம் அத்தியாயம்
1-ம் பாதம் 1-ம் சூத்திரத்துக்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகளருளிய
பாஷியத்தும், சிவஞானபோதம் 2-ம் சூத்திரத்தும் விளக்கப் பட்டுள்ளது.
மேலுலகஞ் சென்ற உயிர், திரும்பும் பொழுது முறையே துறக்கம்,
மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்துப் புகுந்து
வருவதைத் தியானித்தலே பஞ்சாக்கினி வித்தையெனக் கூறுகிறது.
சொர்க்கஞ்
சென்ற ஆன்மா மேகத்து அடைந்து, மழைத் துளியாய்ப்
பூமிக்கு வந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து இந்திரிய
மயமாய்ப் பெண்ணை அடைகின்றான் என விருத்தலால் புருஷ கர்ப்பத்தில்
2 மாதங்கள் தங்குகின்றன.
(மேற்)
இருதிங்கள்
சுபதேவ னெழில் வயிற்றிற் சுவையொடும் போய்
ஒருதிங்கள் புறங்கொடுக்கு மொளிமுகத்தாள் வயிற்றேகி
வருதிங்களொடு பஃதும் வளர்ந்து பிறந்தறிந் தொன்னார்ப்
பொருதிங்க ளரசாண்டு புரிந்தபணி புகல் வாயால்.
(திரு
ஆனைக்காப் புராணம் கோச்செங்கண்ணார்)
|
|