பக்கம் எண் :

9

                       (மேற்)

என்னே தமியே னெனவே யினிநின்
முன்னே நுதலின் முறையா லிருகை
கொன்னே கொடுதாக் குனர்தங் குறைதீர்த்
தன்னே யெனவந் தருள்செய் யெனவே.

                      (காந்தம் - காவிரி நீங்குபடலம்)

வெஞ்சமாக் கூடல்

10.



கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியென்றன்
அழகாகு மக்க ளடகுகொண் டம்பொ னருடியேன்றேற்
றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு
மழுவேந்தியவிகிர்தேசுரன் வாழ்கொங்கு மண்டலமே

     (க-ரை) சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்க
வேண்டுமென்பது கொண்டு, மூத்தபிள்ளையார் முதலிய திருக்குமாரர்களை
ஈடுவைத்துப் பொருள் பெற்று ஈந்த விக்ருதேசுரர் விளங்கும் வெஞ்சமாக்
கூடலும், கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு:- பேரூர் முதலிய மேல்கொங்கு நாட்டுத் தலவழிபாடு
செய்து கொண்டுவரும் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்கத்
திருவுளங்கொண்ட விகுருதபுரிநாதர், ஒரு முதிய அந்தண வடிவுகொண்டார்.
மூத்தபிள்ளையார் முதலிய திருக்குமாரர்கள் சிறுவர்களாய்ப் பின்றொடர்ந்து
வர, நாளும் உள்ளன்புடன் பூசித்து அவ்வூரில் வசிக்கும் ஒரு கிழமையுற்ற
ஆய்மகளிடம் சென்றார், இக்குழந்தைகளை ஈடாக வைத்துக்கொண்டு பொன்
தரவேண்டுமென்றிரந்தனர். அதற்கு இசைந்த அக் கிழமாது அம்முதியார்
குறிப்பிட்ட அளவு பொருள் உதவினள்; ஏற்றுக் கொண்ட தம்பிரானார்,
திருமுன்பதிகமோதிய வன்றொண்டர்க்கு உதவியருளினர்.
(இது வெங்கால நாடு)

                     (மேற்)

கொள்ளைவண் டிமிரு நாட்பூங் கோதையோர் பாகர்முன்பு
கள்ளமி லுள்ளத் தன்பு கனிந்துள கிழவி யார்பாற்
பிள்ளைக ளீடு காட்டிப் பெற்றசெம் பொன்னை யெல்லாந்
தெள்ளிய தமிழ்ப்பா சொன்ன திருத்தொண்டர்க் குவந்தளித்தார்

                                                                    (திருவெஞ்சமாக் கூடற் புராணம்)