கனிந்து உபசாரமொழி
கூறினர். காவற்கூடந்தேடி வந்த கவிராயருக்குப்
பரிசு கொடுக்கக்கையிற் பணமில்லை என்று வருந்தினான். ஒருவாறு
திருந்திக் கோட்டைக்கு வெளியே வந்து தங்கியுள்ள தமது மனைவியாரிடம்
ஏவலாளனொருவனை அனுப்பினார். சமயத்தை நன்கறிந்த மனைவியாரிடத்து
வேறு பொருளில்லை; தான் அணிந்திருந்த திருமங்கலியத்தை
கொடுத்தனுப்பினர். மனைவியார் மனமுவந்தனுப்பிய மங்கலியத்தை வாங்கிச்
சமயத்துக்குதவியான அந்தச் சிறந்த பூஷணத்தைக் கண்களில் ஒத்திக்
கொண்டு, இப்போது இதனைப் பெரியதாகப் பெற்றருளல் வேண்டுமென்று
இரந்து கெஞ்சிக் கவிராயர் கையிற்கொடுத்தார்.
(மேற்)
கொங்கினில்ராமப்
பயனதிகாரக் குரூரத்தினாற்
கங்கு லிராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே
சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின்
மங்கலி யந்தனைத் தந்தான் றமிழ்க்கவி வாணருக்கே.
(தனிக்கவி)
|
அகமகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்ட புலவர் அதனைக் கையிற்
பிடித்துக் கொண்டே தளவாய் ராமப்பையரைக் கண்டு இந்தக்கவியைக்
கூறினர். இதனைத் தெரிந்து ஆச்சரியமுற்ற தளவாய் மெத்த மகிழ்ச்சி
கொண்டு சர்க்கரை மன்றாடியை அழைத்துவரக் கட்டளையிட்டு,
மன்றாடியாரே! நீர் கொடையாளியென அறிந்தேன். நீர் செலுத்த வேண்டிய
இறைவரியைக் காலம் சுபிக்ஷமானவுடன் செலுத்திவிடும் என்று கூறி, இனி
ஏதேனும் வேண்டுமோ எனவே, என்னுடன் சிறையிலிருந்த மற்றைப்
பட்டக்காரர் முதலியவர்களையும் சிறை நீக்க வேண்டுமென வேண்டினர்.
அவ்வாறே விடுதலை செய்தனர்.
வாணுனுரைத்திட
மால்ராமப்பையன் மனமகிழ்ந்து
வேணது கேளெனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்
வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்
தாணுவென் றிம்முடிக் காணிக்கைச் சாசனத் தந்தனரே.
|
இந்த
ராமப்பய்யர் என்பவர் கி.பி. 1623 முதல் 1699 வருஷம்
வரை மதுரையிலாண்ட ஸ்ரீதிருமலை அய்ய நாயடுகாரு அவர்களது
சமஸ்தானத்தில் தளவாயாக இருந்த மிகுந்த பராக்கிரமசாலி. இவரைப்
பற்றித் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை 114 - வது செய்யுள்
முதலியன புகழ்கின்றன. எனவே இந்தச் சரித்திரம் இன்றைக்கு 250
வருஷங்களின் முன் நடந்தது.
|