பக்கம் எண் :

திருநாளைப்போவார்14நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தன் குடியிருக்குஞ் சேரியைக் கைலாசமென்று வர்ணித்துச் சொன்னபடியால்,
உபமன்யபகவான்
மிகவுங் கொண்டாடிச் சொல்லுகின்றார்.

நொண்டிச்சிந்து.

ராகம்-புன்னாகவராளி; தாளம்-மிச்ர ஏகம்.

ஊ பழனமருங்கணையும்-புலைப்-பாடியதுகூரை வீடுதனில்
சுரையோபடர்ந்திருக்கும்-அதைச்-சுற்றிலும்நாய்கள் குலைத்திருக்கும்
பருந்தோடிவட்டமிடும்-இளம்-பச்சைப்பிசிதமே லிச்சைகொண்டு
கோழிகூவுங்கூக்குரலும்-பாழுங்-கொல்லையருகினில் வெள்ளெலும்பும்
நரம்புங்குவிந்திருக்கும்-பல-நெட்டிமிதந்திடும் குட்டைகளில்
நண்டோகுடியிருக்கும்-சிறு-நத்தைகமடம் வலுத்திருக்கும்
தோலூறுங்கேணிகளில்-வெகு-தொல்லைப்படும்வாடை சொல்லறியாப்
பரம்போஅடித்திருக்கும்-வயற்-பக்கங்களில்மெத்த நொக்கெலும்பும்
கிழித்தோல்நரம்புகளும்-அவர்க்-கீனமில்லை சிறுமீனுலரும்
தெருவில்விளையாடிக்கொண்டு-அவர்-தெந்தினம்பாடுவர் சுந்தரமாய்
இலுப்பைமணியரையில்-கட்டி-இண்டந்தலைகளில் பூண்டிருக்கும்
சங்குதோடுகாதணியும்-அருந்-தாவடமேயவர் தூவிடமாம்
மணியோதரித்திருப்பார்-தெரு-வாசற்புறந்தனி லேசிக்கொண்டு
கொண்டாட்டமாயிருப்பார்-கையைக்-கொட்டிக்கொண்டுதனக் கிஷ்டமுடன்
மதுவுண்டுகெக்கலிப்பார்-பற-வாத்தியமும்வெகு நேர்த்தியுடன்
இருக்கும்புலைப்பாடி-அதில்-ஈசன்திருவடி நேசமுடன்
தரிக்கும்ஒருபுலையர்-அவர்-ஜாதிமுறை தவறாதவராம்
நந்தனா ரவர்பெயராம்.

வசனம்.

இவ்விதமாய்க் கடையரிருப்பின் வரப்பினில் வாழ்வார் இப்பரிவுடன்
சிவன்கழற்கேவிளைத்த வுணர்வோடு மந்தராகத்தில் 

ஊ இந்நொண்டிச் சிந்து முழுவதும் 7-ஆம் பக்கத்தில் பதிக்கப் பட்டிருக்கிறது, அதுவே
பகுதி பகுதியாகப் பின்னர் கூறப்படுகிறது.