பக்கம் எண் :

திருநாளைப்போவார்17நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சிவசரவணனே ஞானசம்பந்தரெனத்
     திருவவதாரமாக வந்தசீர்காழி
புவனரட்சகன்றிரு நாயகியையேத்தி
     பூதித்தார்வெகு வாக
ஒருபொற்புரமதி லோங்கியமாயூரத்
     துவந்தவிஸ்வநா தரை-மிகத்தொழுது
ஒருமுகக்கருவிக்குந் தோல்நரம்பிவைதந்தா
     ருலகிற்புகழவுந்தன் பெயரை
உமையொருபாகத்தி லுயர்ந்தபரன்றரு
     மொருபசுவுங்கன் றாக-மாயவேடன்
சமைந்துபின்மனுநீதிச் சோழன்றனக்குக்காட்சித்
     தந்தவாரூர்ச்சென்றாரன் பாக

________

வசனம்.

பின்னும் நந்தனார் தாம் செய்யுந் தருமமேதென்றால், இவர் புலையரானபடியால்
சிவஸ்தலங்களுக்குப் போய் வீதியைச் சுற்றி சந்நிதியில் வந்து தடி விழுந்ததுபோல் உடல்
பணியப் பணிந்து புழுதியில் புரண்டு மயிர் சிலிர்ப்பக் கண்ணீருதிர்ப்ப வாய்குழறி
உரைதடுமாறி ஒருதர மழுது பலதரந்தொழுது எக்கலித்து கெக்கலித்து ஒருதரஞ் சிரித்து
ஒருதரம் வெறுத்து ஜகமறந்து அகமிழந்து அனல்கண்ட மெழுகதுபோ லுள்ளமுருகி
ஆனந்தவெள்ளம் பெருகி கள்ளங் கருகிச் சிவனே சிவனேயென்று வாய்வலிக்கப்பேசி
கைவலிக்கக் கொட்டி கால்வலிக்கக் கூத்தாடி நிற்பவ ரொருமுகூர்த்தஞ் சித்திரத்திலெழுதும் பதுமைபோல் கண்ணிமையாமல் வாயசையாமல்
கையசையாமல் காலெழாமல் ஓசை தெரியாமல் அலையடித்தோய்ந்த கடல்போல
நிறைந்து தன்னைமறந்